63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -70 சடைய நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்
பகுதி -70
சடைய நாயனார் 

திருநாவலூரில் அவதரித்த சடையனாரும் மனைவி இசைஞானி அம்மையாரும் சிறந்த சிவபக்தர்கள். சைவ நெறி தழைத்தோங்க தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் சிவபெருமானுக்கும் சைவத்திற்கும், தமிழுக்கும் அர்ப்பணித்த சுந்தரமூர்த்தி நாயனாரின் தகப்பனார் ஆவர். சடையனார் தன் மகன் சுந்தரர் சைவத்தொண்டாற்றி சிவபெருமானுக்கு தொண்டு செய்ய வேண்டுமென விரும்பினார் அதற்கு ஏற்ப தன் மகனை சிறு வயதில் இருந்தே வளர்த்து வந்தார் சுந்தரருக்கு இட்ட பெயர் நம்பியா ரூ ரன் என்பது ஆகும். தகப்பனார் விருப்பப்படியே சுந்தரரும் சிவபெருமான் மீது பற்றும்
பக்தியும் கொண்டு சிவ பணிகள் பல வாழ்நாளில் செய்தார். சுந்தரமூர்த்தி நாயனார் என்கிற பெரிய திருத்தொண்டரை உலகுக்கு பெற்றுத்தந்த காரணத்தினால் சடையனாரும் நாயனாராக போற்றப்பட்டார்.

Comments