63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -72 சுந்தரமூர்த்தி நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்

பகுதி -72 

சுந்தரமூர்த்தி நாயனார் 

    திருநாவலூரில் அவதரித்த நம்பியார் உரர் என்ற சுந்தரமூர்த்தி யார் சடங்கவி சிவாச்சாரியார் மகளை மணக்க மணமகன் கோலத்தில் திருமணம் நடக்கும் இடத்திற்கு வர அப்பொழுது கிழவர் ஒருவர் அங்குள்ள அனைவரையும் பார்த்து நம்பியாருடன் எனக்கு அடிமை என்று கூறி அதற்கு சாட்சியாக நம்பியாருடன் பாட்டனார் கையப்பமிட்ட ஓலையை அனைவரிடமும் காட்ட நம்பியாரூரர் கோபத்துடன் பித்தன் என்று கூறி ஓலையை கிழித்துப் போட்டார். அதற்கு கிழவர் இது நகல்தான் மூலம் திருவெண்ணைநல்லூரில் இருப்பதாக கூறி அனைவரையும் அழைத்துச் சென்று ஓலையின் மூலத்தை காட்ட கண்ணுற்ற அனைவரும் நம்பியாரூரர் இம்முதியவருக்கு அடிமை என்று கட்டளையிட்டனர். பின்னர் பெரியவர் திருவருட்துறை சிவாலயத்திற்கு நம்பியார் ஒருவரை அழைத்துச் சென்று மறைந்தார். தன்னிடம் வன்மை பேசியதால் வன்தொண்டன் எனவும் பித்தன் எனக் கூறியதால் பித்தா என பதிகம் பாடுமாறு அசரீரி கேட்க நாயனார் பித்தா பிறைசூடி என பாடினார்.

Comments