63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -73 மாணிக்கவாசகர் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்

பகுதி -73

மாணிக்கவாசகர் 

சமயக்குரவர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தார். இவரை வாதவூரார் எனவும் அழைக்கப்படுகின்றார். அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் முதலமைச்சராக பணிபுரிந்த மாணிக்கவாசகரிடம் பெரும் பொருளை கொடுத்து குதிரைகள் வாங்கி வரும்படி மன்னன் கூற அதற்கிணங்க பெருமானார் போகும் வழியில் திருப்பெருந்துறையில் குறுந்த மரத்தடியில் ஈசனே குருவாக தோன்றி அவருக்கு ஞான தீட்சை அளித்தார் பெரும் பொருளை திருக்கோவில் கட்டுவதற்கு செலவிட்டார் மாணிக்கவாசகர் இறைவன் அசரீரி வாக்குப்படி ஆவணி மூலம் தினத்தன்று குதிரைகள் வருவதாக மன்னனிடம் கூறினார் அவ்வாறு வராமல் போகவே மன்னன் மாணிக்கவாசகரை துன்புறுத்த சிவபெருமான் குதிரைகளோடு வந்து அவரை துன்பத்தில் இருந்து மீட்டார் அன்றிரவே குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறி காடுகள் நோக்கி ஓடின. மனிதனுடைய வாழ்வியல் நெறிமுறைகளை கூறும் திருவாசகத்தை எழுதிய பெருமை மாணிக்கவாசகர் பெருமானையே சேரும். 

Comments