63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -74 சேக்கிழார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள்

பகுதி - 74

சேக்கிழார் 

குன்றத்தூரில் அவதரித்த சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழி ராம தேவர்.

குலோத்துங்க அனபாய சோழ மன்னரின் முதலமைச்சராகப் பணியாற்றிய இலக்கிய நூல்களை கற்று அறிந்த சேக்கிழார் 63 நாயன்மார்களின் பக்தி நெறியினையும், முக்கி வழிகளையும் "பெரிய புராணம்"
 எனும் பெருமை வாய்ந்த நூலாக இயற்றி தில்லை சென்று அம்பலவாணரின் சன்னதியில் அமர்ந்தார்.

வானில் "உலகெலாம்" என ஒலி கேட்க அதுவே தில்லைகூத்தனாரின் ஒலியெனக் கருதி உலகலாம் எனும் வரியை முதலடியாக கொண்டு "பெரிய புராணம்" எனும் நூலை எழுதி புகழ்பெற்றார் சோழ நாட்டில் மட்டுமல்லாது பிற நாடுகளிலும் சேக்கிழார் புகழ் பரவியது இதனை கண்ட சோழ மன்னன் சேக்கிழாரை அரசை ஆணை மீது ஆசனத்தில் அமர்த்தி தானும் அமர்ந்து சேக்கிழார் பெருமானுக்கு வெண்சாமரம் வீசினார்.

உத்தமச் சோழர் பல்லவர் என்ற பட்டத்தையும் அருளினார்... சிவபெருமானுடைய புகழ் பரப்பிய 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை உலகறிய செய்து பெரும் காவியத்தை படைத்த பெருமை சேக்கிழார் பெருமானையே சேரும் 🙏🙏🙏

Comments