108 வலம்புரி சங்குகள் ஒரே இடத்தில் பார்க்கும் பாக்கியம் 🙏 கொல்லிமலை கோரக்கர் குருபூஜை விழா 🙏

 நாம் எங்கேயாவது ஒரு வலம்புரி சங்கோ அல்லது இரு வலம்புரி சங்குகளையும் பார்த்தாலே மனதில் பேரின்பமாக இருக்கும் என்பதை சிவ நம்பிக்கையில் உள்ள எவராலும் மறுக்க முடியாத ஒன்று...‌


ஆனால் ஒரே இடத்தில் 108 வலம்புரி சங்குகளை வைத்து அந்த 108 வலம்புரி சங்குகளுக்கும் ஒரு அற்புதமான பூஜையை செய்யும் காட்சியைப் பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைத்தால் நாம் எவ்வளவு பேரின்பம் கொள்வோம்! 

அப்படி ஒரு பெரும் பாக்கியம் எனக்கு கொல்லிமலையில் கிடைத்தது ஆம் கொல்லிமலையில் நடந்த கோரக்கர் சித்தர் ஐயாவின் குருபூஜை விழாவில் தான் இந்த அரிய காட்சியை இறைவன் எமக்கு காண்பித்தார்...

 அந்த காட்சியை உங்களுக்கு அப்படியே வீடியோ வடிவில் காட்சிகளாக கொடுக்க ஆசைப்பட்டே இந்த வீடியோவை இங்கே பதிவிட்டுள்ளோம்.


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 🙏


ஓம் நமசிவாய வாழ்க 🙏




Comments