கொல்லிமலை பாம்பாட்டி சித்தர் ஐயாவின் குகை அருகே உள்ள ஆற்றில் சிவனடியார்கள் தியானம் செய்த அற்புதமான காட்சி

 பொதுவாக கொல்லிமலை என்றாலே நமக்கு ஒரு வகையான பயமும் பரவசமும் வருவதை தவிர்க்க இயலாது ஏனெனில் கொல்லிமலையை பற்றி இப்பொழுது வரை நாம் அப்படித்தான் கதைகளாக கேட்டு வளர்ந்துள்ளோம். 

கொல்லிமலையில் கொல்லி பாய் பிசாசு இருப்பதாகவும் கொல்லிமலையில் பல்வேறு மாந்திரீகர்கள் வாழ்வதாகவும் கொல்லிமலையில் குள்ள மனிதர்கள் பலரும் இப்பொழுதும் வாழ்ந்து வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் கொல்லிப்பாவை எனும் அதிபயங்கரமான சக்தி அடங்கிய ஒரு விஷயம் கொல்லிமலையில் இருப்பதாகவும் இன்னும் பற்பல கொல்லிமலை பற்றிய அதிசயமான விஷயங்கள் கேட்டே நாம் வளர்ந்துள்ளோம். 

என்னைப் பொருத்தவரை கொல்லிமலைக்கு யாம் கடந்த 20 வருடங்களாக சென்று வருகிறோம் எமக்கு பல்வேறு அற்புதமான அனுபவங்களும், பல்வேறு ஆச்சரியமான அனுபவங்களும், பல்வேறு சித்தர்களின் மையப்படுத்திய அனுபவங்களும் கிடைத்துள்ளன .. 


கடந்த முறை என் கொல்லிமலையில் நடைபெற்ற கோரக்கர் குருபூஜையில் கலந்து கொள்ள சென்றோம் அப்பொழுது பாம்பாட்டி சித்தர் ஐயாவின் குகைக்குச் சென்று தியானம் செய்து விட்டு வரலாம் என்று செல்லும்பொழுது எம்முடன் இரண்டு சிவனடியார்கள் வந்தார்கள் மொத்தமாக நாங்கள் ஐந்து பேர் அங்கே சென்றோம் அங்கே பாம்பாட்டி சித்தர் ஐயா இந்த தியானம் செய்த குகை அருகே ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கும் அந்த ஆற்றில் இந்த இரண்டு சிவனடியார்களும் குளித்த நிலையில் தியானம் செய்த அற்புதமான காட்சியை நாம் பார்த்த பொழுது அந்த பாம்பாட்டி சித்தரே இங்க வந்து விட்டாரோ என்று தான் எமக்கு நினைக்கத் தோன்றியது 🙏 


அவர்கள் குளிக்கும் காட்சியை படம் பிடித்து ஒரு சிறு வீடியோ தொகுப்பாக இங்கே பதிவிட்டுள்ளேன்.

 ஓம் நமசிவாய 🙏


Comments