கொல்லிமலை அறப்ளீஸ்வரர் கோவிலில் இருந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி வரை


 

கொல்லிமலை அதிசயங்கள் : 

இந்தப் பகுதியில் தமிழகத்தின் மிகவும் அற்புதமான எழில் மிகுந்த தோற்றத்துடன் அருவிகளின் ராஜா என்று அழைக்கப்படும் கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி போகும் வழியைத்தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.


கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோவிலில் எதிரே படிக்கட்டுகள் செல்லும் அதன் உள்ளே அனுமதி சீட்டு பத்து ரூபாய் கொடுத்து அனுமதிச்சிட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்லும் பொழுது கிட்டத்தட்ட 1200 படிகளுக்கு மேல் கீழே இறங்கினால் உங்களுக்கு ஒரு அற்புதமான சுக அனுபவம் தரக்கூடிய ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியின் அற்புதமான காட்சி கிடைக்கும்.


கிட்டத்தட்ட 300 அடிக்கு மேல் இருந்து செங்குத்தாக விழும் நீர்வீழ்ச்சியை உங்களால் வேறு எங்கும் தமிழகத்தில் பார்க்க இயலாது என்பதே முற்றிலும் உண்மை. 

மூலிகை நிறைந்த இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்கும் பொழுது நாம் கொல்லிமலையில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகும் நம் உடம்பில் இரண்டு ஒரு நாட்கள் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நாம் உணர்வதை தவிர்க்க இயலாது..


அப்படிப்பட்ட ஒரு அற்புதமான நீர்வீழ்ச்சி தான் கொல்லிமலையின் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி இதற்கு ஏன் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என்ற பெயர் வந்தது என்பதை நீங்கள் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி முதல் முறையாக பார்க்கும் பொழுதே உணர்ந்து கொள்வீர்கள் ஆம் எந்த தடையும் இன்றி ஆகாயத்திலிருந்து நேரடியாக கீழே விழும் தண்ணீரை நீங்கள் பார்க்கலாம் ஆகவே தான் இந்த நீர்வீழ்ச்சிக்கு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.

ஓம் நமசிவாய 🙏

Comments