கொல்லிமலை பாம்பாட்டி சித்தர் ஐயாவின் குகைக்கு ஒரு திரில்லர் பயணம்


 

கொல்லிமலை பற்றிய அறிமுகம் ஏற்கனவே நான் சில பதிவுகளில் கொடுத்துள்ளேன் ஆகவே இந்த பதிவில் கொல்லிமலையை பற்றி அறிமுகப்படுத்த தேவையில்லை என்பது எமது விருப்பம்.


இருப்பினும் கொல்லிமலையின் அதிசயங்களை சொல்லாமல் இருக்க இயலாது என்ற காரணத்தினால் அந்த அதிசயங்கள் வரிசையில் இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது கொல்லிமலையில் உள்ள பாம்பாட்டி சித்தர் ஐயா வாழ்ந்து தியானம் செய்த குகையும் அக்குகைக்கு செல்லும் பாதையையும் அக்குகைக்கு அருகே உள்ள ஆறையும் பற்றி தான்... 


கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவிலில் எதிர் திசையை இருக்கும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி செல்லும் படிக்கட்டுகளில் சுமார் 800 படிக்கட்டுகள் இறங்கிய பிறகு வலது புறத்தில் காட்டுக்குள் இறங்க வேண்டும் காட்டுக்குள் இறங்கி அங்கே மரங்களிலும் பாறைகளிலும் அம்புக்குறிகள் இடப்பட்டு இருக்கும் இடத்தை நோக்கி மெதுவாக கையில் ஊன்றுகோல் எடுத்துச் செல்வது மிக அவசியம் ஒரு 40லிருந்து 45 நிமிடம் சென்றோம் ஆனால் இறுதியில் பாம்பாட்டி சித்தர் ஐயா வாழ்ந்த குகை நமக்கு தெரிய வரும் ... 


இந்த குகைக்கு நீங்கள் சென்றவுடன் குகைக்கு மிக அருகிலேயே வலது புறத்தில் ஒரு பெரிய ஆறு ஒன்று பேரிறைச்சலுடன் ஓடிக் கொண்டிருக்கும்.

பாம்பாட்டி சித்தர் ஐயா வாழ்ந்த குகையில் உள்ளே நின்று நீங்கள் அந்தப் பகுதியை ஒரு நிமிடம் அமைதியாக உற்று நோக்கினால் அவர் எவ்வளவு ரசனையானவர் எவ்வளவு இயற்கையின் மீது காதல் கொண்டவர் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்... 

அந்த இடம் பார்ப்பதற்கும், இருப்பதற்கும் ஒரு குட்டி சொர்க்கம் போல  நாம் உணர்வதை புரிந்து கொள்ள முடியும்.

அப்படி ஒரு இயற்கை சூழலுடன் ரம்யமான அந்த குகையில் தான் பாம்பாட்டி சித்தர் ஐயா வாழ்ந்தால் என்பதை நாம் கேள்விப்பட்டவுடன் அந்த இடத்தில் விழுந்து வணங்கி சிறிது நிமிடம் உட்கார்ந்து தியானம் செய்துவிட்டு அங்கிருந்து வருவது நம் அனைவருக்கும் நல்லது ஆகும்.

மேலே உள்ள வீடியோ தொகுப்பில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் இருந்து வலப்புறமாக காட்டுக்குள் இறங்கி நடந்து செல்லும் வழி பாதைகள் மற்றும் குகையின் அமைப்பு குகையின் வீடியோக்கள் போன்ற அனைத்தும் தொகுத்துக் கொடுத்துள்ளேன...‌

ஓம் நமசிவாய வாழ்க 🙏

Comments