கொல்லிமலையில் நடைபெறும் கோரக்கர் சித்தர் குருபூஜை விழா என்றால் என்ன?



 

கொல்லிமலை கோரக்கர் குருபூஜை என்றால் என்ன ? 


கோரக்கர் சித்தர் ஐயாவை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட சீடர்கள் கோரக்கர் சித்தர் ஐயாவின் சமாதி நாளை குருபூஜையாக வணங்கி கொண்டாடுகிறார்கள்.


 இந்த குருபூஜை என்பது எப்படி வணங்கப்படுகிறது என்றால் முதலில் கொல்லி மலையை சுற்றி அருகாமையில் உள்ள தூரத்தில் உள்ள சிவனடியார்கள் சிவ பக்தர்கள் சித்தர்கள் ஆண்டிகள் யோகிகள் சாதுக்கள் போன்றவர்களுக்கு தேதி குறிப்பிடப்பட்ட பத்திரிக்கை கொடுக்கப்படுகிறது அதாவது இந்த தேதியில் கோரக்கர் ஐயாவிற்கு நாங்கள் குருபூஜை செய்யவிருக்கிறோம் நீங்கள் அவசியம் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துக் கொடுக்க வேண்டும் என்பது போன்ற அழைப்பிதழ் கொடுக்கப்படுகிறது..‌‌

அதன் பிறகு குருபூஜை நடப்பதற்கு முன்பாகவே இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அங்கே துறவிகள் சாதுக்கள் சன்னியாசிகள் சாமியார்கள் போன்ற அனைவரும் ஒன்று கூடுகின்றனர் இந்த முறை நாம் சென்று இருந்ததால் அங்கே குறைந்தது ஆயிரம் பேராவது திரண்டு இருப்பார்கள் என்பது என்னுடைய யூகம்.


குருபூஜை அன்று வந்திருக்கும் அனைத்து சாதிகளுக்கும் முனிவர்களுக்கும் சாமியார்களுக்கும் முதலில் அன்னதானம் செய்யப்படுகிறது அன்னதானம் என்றால் ஏதோ சாதாரண உணவு அல்ல மிகச் சிறப்பான உணவு திருமண வீடுகளில் வைக்கப்படும் உணவுகளை போல கூட்டு, பொறியியல், அவியல், ரசம், மோர், தயிர், காரக்குழம்பு, வற்றல், பொரியல், இனிப்பு, பாயாசம், பழம் போன்ற அனைத்தும் அந்த இலையில் பரிமாறப்படுகிறது.. 

 

யாம் கூட அங்கே அந்த நிகழ்ச்சியை நடத்துபவரை விளையாட்டாக ஒரு கேள்வி கேட்டோம் அதாவது "ஐயா உங்களுக்கு வேலை இல்லையா? எதற்காக இந்த சாமியார்களையும், பிச்சைக்காரர்களையும் அழைத்து வந்து இப்படி தடபுடலாக ஒரு விருந்து வைக்கிறீர்கள்? என்று கேட்டேன் அதற்கு அவர் சிரித்துக் கொண்டே கூறிய பதில் தான் அங்கே அற்புதமான விளக்கமாக எமக்கு இருந்தது..


அவர்.. " தம்பி இங்கே இருக்கும் சாமியார்கள் சாதுக்கள் யோகிகள் இப்படி எவரும் மூலமாவது வந்து நாங்கள் கொடுக்கும் இந்த அன்னதானத்தை எங்கள் குரு தேவரான கோரக்கர் ஐயா சாப்பிட்டு எங்களை வாழ்த்துவார் என்பது நாங்கள் நம்பும் ஒரு நம்பிக்கை அதன்படியே ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு சிம்டம்ஸ் அவர் கொடுத்து விட்டு செல்வார் யாம் வந்தோம் என் உண்டோ என் பெற்றுக் கொண்டோம் என்பதை உணர்த்திவிட்டு செல்வார் அதனால் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி உண்டாகும் ஆகவே தான் இவர்களை அழைத்து தடபுடலான விருந்து வைக்கிறோம்" என்று கூறி முடித்தார்... 

அப்போதுதான் எமக்கு புரிந்தது "ஓஹோ இதில் இவ்வளவு பெரிய ரகசியம் உள்ளதா! சரி இதற்கு மேல் எதுவும் கேட்காமல் நடப்பதைக் கூர்ந்து கவனிப்போம்" என்பதை போல் என் மனதில் நினைத்துக் கொண்டு அங்கே நடக்கும் அனைத்தையும் அதன்பிறகு இன்னும் தீவிரமாக கவனிக்க தொடங்கினேன்...


அதன் பிறகு மாலை நேரம் நெருங்கியவுடன் வந்திருக்கும் சாதுக்கள் முனிவர்கள் சாமியார்கள் போன்றவர்களுக்கு உடைகள் ருத்ராட்ச மாலைகள் மற்றும் காவி உடை ஜோன்நாப்பை போன்றவர்களை கொடுத்தார்கள் இதற்கு பெயர் வஸ்திரதானம் என்று கூறுகிறார்கள் அதன்பிறகு அவர்களுக்கு சொர்ணதானம் என்று ஒரு தானத்தையும் செய்கிறார்கள் அது அங்கே வந்திருக்கும் சாமியார்களுக்கும், சாதுக்களுக்கும் கோரக்க சித்தர்களின் சீடர்கள் கொடுக்கும் அவர்களால் முடிந்த ஒரு பணம் ஆகும்...‌‌


இது போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய வீடியோ தான் மேலே கொடுத்துள்ளேன் நண்பர்கள் அந்த வீடியோவை பார்த்து கோரக்கர் சித்தர் ஐயாவின் குருபூஜை என்றால் என்ன என்பதையும் கோரக்கர் எப்படி தமது சிலர்களிடம் வந்து அன்னதானத்தையும் சொர்ணதானத்தையும் வஸ்திரதானத்தையும் பெற்றுக் கொள்கிறார் என்பதையும் தெளிவாக பார்த்து புரிந்து கொள்ளும் 

ஓம் நமச்சிவாய🙏


Comments