திருவண்ணாமலை தீபம் ஏன் ஏற்படுகிறது? தெரியுமா உங்களுக்கு?

 ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை மலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம்... 

ஆனால் இந்த தீபம் ஏன் ஏற்படுகிறது,,? அன்று ஏன் நாம் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறோம்? என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா,,? 


புராணத்தில் இது தொடர்பாக சொல்லப்படும் கதையை பார்க்கலாம் வாங்க 🙏


ஒருமுறை பிரம்மா மற்றும் விஷ்ணு இவர்கள் இருவருக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது... இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தாங்கள் தான் பெரியவர் என்று வாதிட்டனர்.. 


இந்த போட்டியில் பிரம்மா தனது படைக்கும் தொழிலையும் விஷ்ணு தனது காக்கும் தொழிலையும் விட்டு விட்டு தர்க்கத்தில் ஈடுபட்டனர்... இதனால் அனைத்து உலகும் ஸ்தம்பித்து போனது... 


உடனடியாக தேவர்கள், ரிஷிகள், முனி கள் இன்னும் ஏனையோர் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்... 

உடனடியாக சிவபெருமான் பிரம்மா மற்றும் விஷ்ணு முன்பாக தோன்றி தீ பிழம்பாக மாறினார் (நெருப்பு தூண் வடிவமாக) ஆகாயத்திற்கும் பூமிக்கு அடியிலும் அந்த நெருப்பு தூண் சென்றது! அந்த நேரத்தில் சிவபெருமான் இருவரையும் பார்த்து "உங்களில் யார் எனது தலைமுடியையோ அல்லது பாதத்தையோ முதலில் தொட்டுவிட்டு வந்தால் அவர்களே உங்களில் பெரியவர் என்றார்... 


சிவபெருமான் சொன்ன அடுத்த வினாடி பிரம்மா அன்னப்பறவை வாகனத்தில் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தது விட்டார்.. சிவபெருமான் தலையை பார்ப்பதற்கு... 


விஷ்ணு பகவான் வராக அவதாரம் ( பன்றி அவதாரம்) எடுத்து பூமியை நோண்டி கீழ் நோக்கி சென்றார் சிவபெருமானின் கால்களை பார்ப்பதற்கு... 


இருவரும் நீண்ட கால பயணம் செய்தும் இருவருக்குமே வெற்றி கிடைக்கவில்லை...  ஆக இருவரும் தங்களின் ஆணவத்தை விட்டு தங்கள் இருவரையும் விட சிவபெருமான் தான் பெரியவர் என்று உணர்ந்து...  மீண்டும் சிவபெருமான் எந்த இடத்தில் இவர்களுக்கு காட்சி கொடுத்தாரோ அங்கு வந்து சிவனை வணங்கி வருத்தம் தெரிவித்தனர்... 


அந்த நேரத்தில் சிவபெருமானை பார்த்து " சுவாமி எங்கள் ஆணவத்தை அழித்த இந்த நெருப்பு பிழம்பு அனைவருக்கும் தரிசனம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்... 


ஆகவே அன்றைய தினத்தில் அதாவது கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் நாம் அனைவரும் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறோம்... இந்த தத்துவத்தை உணரவே திருவண்ணாமலையில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறோம்... 

ஓம் நமசிவாய வாழ்க 🙏


கீழேயுள்ள வீடியோவில் 2023 ம் வருடம் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் அற்புதமான காட்சி,,, 


மேலும் பல்வேறு ஆன்மிகம் தொடர்பான பதிவுகள் கீழே கொடுத்துள்ளேன் ;-














Comments