திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1003 to 1014 thirumoolar thirumandhiram shiva vishnu tv நான்காம் தந்திரம் 3. அருச்சனை

   திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -  1003 to 1014

  thirumoolar thirumandhiram 

  shiva vishnu tv



  நான்காம் தந்திரம் 

 3. அருச்சனை 


1003

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்

வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்

தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை

செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  1004  

சாங்கம தாகவே சந்தொடு சந்தனம்

தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்

பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து

ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே. 


shiva vishnu tv

 1005

 அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே

பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்

துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்

இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


1006

 எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை

எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன்

எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்

எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


1007

  நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்

மண்ணிய நைவேத் தியம்அனு சந்தான

நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபமென்னும்

மண்ணும் அனல்பவ னத்தோடு வைகுமே. 


shiva vishnu tv

 1008  

வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர்

வேண்டார்கள் கன்மம் அதில்இச்சை அற்றபேர்

வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்

வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 1009

 அறிவரு ஞானத்து எவரும் அறியார்

பொறிவழி தேடிப் புலம்புகின்றார்கள்

நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்

எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.  


shiva vishnu tv

1010

  இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்

மருளறி யாமையும் மன்னும் அறிவு

மருளிவை விட்டெறி1 யாமை மயங்கும்

மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


1011

  தான்அவ னாக அவனேதான் ஆயிட

ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்

போனவன் அன்பிது நாலாம் மரபுறத்

தான்அவன் ஆகுமோ 1ராசித்த தேவரே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 



1012

 ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்

நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும்

பாங்கார் உகாரம் பயில்நெற்றி உற்றிடும்

வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே. 


shiva vishnu tv

 1013

 நமவது ஆசனம் ஆன பசுவே

சிவமது சித்திச் சிவமாம் பதியே

நமவற ஆதி நாடுவது அன்றாம்

சிவமாகு மாமோனம் சேர்தல்மெய் வீடே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


1014

  தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும்

ஒளிவரு நாளில் ஓர்ஏட்டில் உகளும்

ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில்

வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே. 

Comments