திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1155 to 1254 thirumoolar thirumandhiram shiva vishnu tv நான்காம் தந்திரம் 8. ஆதாரம் ஆதேயம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1155  to 1254 

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv

  நான்காம் தந்திரம்

   8. ஆதாரம்‌, ஆதேயம்‌

1155

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு

நாலிதழானவை நாற்பத்து நாலுள

பாலிதழானவள்  பங்கய மூலமாய்த்

தானிதழாகித் தரித்திருந்தாளே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1156

 தரித்திருந்தாளவள் தண்ணொளி நோக்கி

விரித்திருந் தாளவள் வேதப் பொருளைக்

குறித்திருந் தாளவள் கூறிய ஐந்து

மறித்திருந் தாளவள் மாதுநல் லாளே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1157

 மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்

பாதிநல் லாளும் பகவனு மானது

சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்

வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1158

 வெள்ளடை யானிரு மாமிகு மாமலர்க்

கள்ளடை யாரக் கமழ்குழ லார்மன

மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற

பெண்ணொரு பாகம் பிறவி பெண்ணாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1159 

 பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதமை

பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது

பெண்ணுடை ஆணென் பிறப்பறிந் தீர்க்கின்ற

பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்றவாறே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1160

 பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை

மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாங்

காச்சற்ற சோதி கடவு ளுடன் புணர்ந்

தாச்சற்று எனுட்புகுந் தாலிக்குந் தானே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1161

  ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி

பாலித் துலகிற் பரந்து பெண்ணாகும்

வேலைத் தலைவியை வேத முதல்வியை

ஆலித் தொருவன் உகந்துநின் றானே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1162

உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ

டுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி

உகந்துநின் றான்இவ் உலகங்கள் எல்லாம்

உகந்துநின் றான்அவ டன்றோ டொகுத்தே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1163 

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்

துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி

புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்

தொத்த கருத்துச்(1) சொல்லகிலேனே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1164

  சொல்லவொண்ணாத அழற்பொதி மண்டலஞ்

செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்

வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி

மல்லவொண் ணாத மனோன்மனி தானே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1165  

தானே இருநிலந் தாங்கி விண் ணாய்நிற்குந்

தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களுந்

தானே மழைபொழி தையலு மாய்நிற்குந்

தானே வடவரைத் தண்கடற் கண்ணே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1166

  கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்

மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணாப்

பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்

விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1167

 கண்டெண் டிசையுங் கலந்து வருங்கன்னி

பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்

விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு

தொண்டெண் டிசையுந் தொழநின்ற கன்னியே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1168  

கன்னி ஒளியென நின்றவிச் சந்திரன்

மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறஞ்

சென்னி யிருப்பிடஞ் சேர்பதி னாறுடன்

பன்னி யிருப்பப் பராசத்தி யாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1169

 பராசத்தி என்றென்று பல்வகை யாலுந்

தராசத்தி யான தலைப்பிர மாணி

இராசாத்தி யாமள வாகமத் தாளுங்

குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1170

உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி

உணர்ந்துயி ராய்நிற்கும் உன்னதன் ஈசன்

புணர்ந்தொரு காலத்துப் போகமதாதி

இணைந்து பரமென் றிசைந்திது தானே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1171 

 இதுவப் பெருந்தகை எம்பெரு மானுள்

பொதுவக் கல்வியும்(1) போகமுமாகி

மதுவக் குழலி மனோன்மனி மங்கை

அதுவக் கல்வியுள்(1) ஆயுழி யோகமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1172

 யோகனற் சத்தி ஒளிபீடந் தானாகும்

யோகனற் சத்தி ஒளிமுகந் தெற்காகும்

யோகனற் சத்தி உதர நடுவாகும்

யோகனற் சத்திதாள் உத்தரந் தேரே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1173 

 தேர்ந்தெழு மேலாஞ் சிவனங்கி யோடுற

வார்ந்தெழு மாயையும் அந்தமதாய் நிற்கும்

ஒர்ந்தெழு விந்துவும் நாதமும் ஒங்கிடக்

கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1174

  தானான வாறெட்ட தாம்பரைக் குண்மிசை

தானான வாறுமீ ரேழுஞ் சமகலை

தானான விந்து சகமே பரமெனுந்

தானாம் பரவாதனை எனத் தக்கதே. 

1175

 தக்க பராவித்தை தானிரு பானேழிற்

றக்கெழு மொருத் திரஞ்சொல்லச் சொல்லவே

மயக்கிடும் எண் சத்தி வெண்ணிற முக்கண்ணி

தொக்க கதையோடு தொன்முத்திரையாளே. 

1176

  முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்

தத்துவ மாயல்ல வாய சகலத்தள்

வைத்த பராபர னாய பராபரை

சத்தியு மானந்த சத்தியுங் கொங்கே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1177

  கொங்கின்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி

பொங்கிய குங்குமத் தொளிபொ ருந்தினள்

அங்குச பாச மெனுமகி லங்கனி

தங்கு மவள்மனை தானறி வாயே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1178 

வாயும் மனமுங் கடந்த மனோன்மனி

பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளுநல் தாரமு மாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1179

 தாரமு மாகுவள் தத்துவ மாய்நிற்பள்

காரண காரிய மாகுங் கலப்பினள்

பூரண விந்து பொதிந்த புராதனி

பாரள வாந்திசை பத்துடை யாளே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1180

  பத்து முகமுடையாள்நம் பராசக்தி

வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம்

ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே

நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1181

  கூறிய கன்னி குலாய பருவத்தள்

சீரிய ளாயுல கேழுந் திகழ்ந்தவள்

ஆரிய நங்கை யமுத பயோதரி

பேருயி ராளி பிறிவறுத்தாளே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1182

 பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை

குறியொன்றி நின்றிடுங் கோமளக்கொம்பு

பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே

அறிவொன்ற நின்றனள் ஆருயிருள்ளே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1183

 உள்ளத்தி னுள்ளே யுடனிருந் தைவர்தங்

கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்

கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து

வல்லற் றலைவி மருட்டிப் புரிந்தே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1184 

 புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி

இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்

பொருந்தி யிருந்த புதல்வி பூவண்ணத்

திருந்த விலக்கில் இனிதிருந்தாளே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1185  

 இருந்தனள் ஏந்திழை என்னுள மேவித்

திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி

நிரந்தர மாகிய நீர்திசை யோடு 

பொருந்த விலக்கிற் புணர்ச்சி அதுவே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1186 

 அதுஇது என்னும் அவாவினை நீக்கித்

துதியது செய்து சுழியுற நோக்கில்

விதியது தன்னையும் வென்றிட லாகும்

மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1187 

 மூன்றுள மண்டல மோகினி சேர்விடம்

ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில்

தோன்று மிலக்குற லாகுதல் மாமாயை

ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1188

  இந்துவி னின்றெழு நாதம் இரவிபோல்

வந்துபின் நாக்கின் மதித்தெழுங் கண்டத்தில்

உந்திய சோதி இதயத் தெழும்ஒலி

இந்துவின் மேலுற்ற ஈறது தானே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1189

  ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிர

மாறுதல் இன்றி மனோவச மாயெழில்

தூறது செய்யுஞ் சுகந்தச் சுழியது

பேறது செய்து பிறந்திருந் தாளே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1190 

 இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத்

திருந்திய ஆனந்தஞ் செந்நெறி நண்ணிப்

பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி

வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1191 

 மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின்

றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்

கொங்கைநல் லாளுங் குமாரர்கள் ஐவரும்

தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1192

  சடங்கது செய்து தவம்புரி வார்கள்

கடந்தனி னுள்ளே கருதுவ ராகில்

தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி

அடங்கிடும் அன்பின தாயிழை பாலே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1193

  பாலித் திருக்கும் பனிமல ராறினும்

ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி

சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திர

மூலத்து மேலது முத்ததுவாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1194 

முத்து வதனத்தி முகத்தொறு முக்கண்ணி

சத்தி சதுரி சகளி சடாதரி

பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி

வித்தகி எண்ணுள்ள மேவிநின் றாளே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1195

  மேவிய மண்டலம் மூன்றுடன் கீழெரி

தாவிய நற்பதத் தண்மதி யங்கதிர்

மூவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பார்

ஓவினு மேலிடும் உள்ளொளி யாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1196

 உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள்

வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடுங்

கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்குங்

கொள்ள விசுத்திக் கொடியமு தாமே

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1197

 கொடிய திரேகை குருவுள் இருப்பப்

படியது வாருனைப் பைங்கழ லீசன்

வடிவது வானந்தம் வந்து முறையே

இதுமுதல் ஆறங்கம் ஏந்திழையாளே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1198

 ஏந்திழை யாரும் இறைவர்கள் மூவரும்

காந்தார மாறுங் கலைமுதல் ஈரெட்டு

மாந்த குளத்தியு மந்திர ராயமுஞ்

சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1199

 சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை

முத்திக்கு நாயகி என்ப தறிகிலர்

பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்

கத்திய நாய்போற் கதறுகின்றாரே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1200

 ஆரே திருவின் திருவடி காண்பார்கள்

நேரேநின் றோதி நினையவும்வல் லார்க்குக்

காரேர் குழலி கமல மலரன்ன

சீறேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1201  

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து

முந்தையில் வைத்துத் தம்மூலத்திலே வைத்து

நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்

சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1202

 சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்

சிவாதியி லாருஞ் சிலைநுத லாளை

நவாதியி லாக நயந்தது ஓதில்

உவாதி அவளுக் குறைவில தாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1203

 உறைபதி தோறும் முறைமுறை மேவி

நறைகமழ் கோதையை நாடொறு நண்ணி

மறையுட னேநிற்கு மற்றுள்ள நான்கும்

இறைதினைப்1 போதினில் எய்திட லாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1204 

 எய்திட லாகும் இருவினை யின்பயன்

கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி

மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு

கைதவம் இன்றிக் கருத்துறு மாறே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1205

 கருத்துறுங் காலங் கருது மனமுந்

திருத்தி யிருந்தவை சேரு நிலத்து

ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல்

இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆகுமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1206

 ஆமையொன் றேறி அகம்படி யானென

ஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்

தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்

சோம நறுமலர் சூடிநின் றாளே

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1207  

சூடிடும் அங்குச பாசத் துளைவழி1

கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகை

நாடும் இருபத நன்னெடு ருத்திரம்

ஆடிடும் சீர்புனை ஆடகமாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1208

  ஆமயன் மாலரன் ஈசன் சதாசிவன்

தாமடி சூடிநின் றெய்தினர் தம்பதங்

காமனுஞ் சாமன் இரவி கனலுடன்

சோமனும் வந்தடி சூடநின் றாளே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1209

 சூடும் இளம்பிறை சூலி கபாலினி

நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை

நாடி நடுவிடை ஞாள முருவநின்

றாடு மதன்வழி அண்ட முதல்வியே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1210

  அண்ட முதலாய் அவனி பரியந்தங்

கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது

கண்டனுங் கண்டியு மாகிய காரணங்

குண்டிகை கோளிகை கண்டத னாலே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1211 

 ஆலமுண் டானமு தாங்கவர் தம்பதஞ்

சாலவந் தெய்துந் தவத்தின்பந் தான்வருங்

கோலிவந் தெய்துங் குவிந்த பதவையோ

டேலவந் தீண்டி இருந்தனள் மேலே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1212

  மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்

காலால் வருந்திக் கழிவர் கணத்திடை

நாலா நளினநின் றேத்திநட் டுச்சிதன்

மேலா மெழுத்தின ளாமத்தி னாளே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1213

  ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்

ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்

நாம நமசிவ யவ்வென்றிருப் பார்க்கு

நேமத் துணைவி நிலாவிநின் றாளே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1214 

 நிலாமய மாகிய நீள்படி கத்தி

சிலாமய மாகுஞ் செழுந்த ரளத்தி

சுலாமய மாகுஞ் சுரிகுழற் கோதை

கலாமய மாகக் கலந்துநின் றாளே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1215

  கலந்துநின் றாள்கன்னி காதல னோடுங்

கலந்துநின் றாளுயிர் கற்பனை எல்லாங்

கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாங்

கலந்துநின் றாள் கன்னி காலமு மாயே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1216

 காலவி எங்குங் கருத்தும் அருத்தியுங்

கூலவி ஒன்றாகுங் கூட இழைத்தனள்

மாலினி மாகுலி மந்திர சண்டிகை

பாலினி பாலவன் பாகம தாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1217

  பாகம் பராசக்தி பைம்பொன் சடைமுடி

ஏகம் இருதயம் ஈரைந்து திண்புய

மோக முகமைந்து முக்கண் முகந்தொறும்

நாகம் உரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1218

  நாதனு நாலொன் பதின்மருங் கூடிநின்

றோதிடுங் கூட்டங்கள் ஓரைந் துளஅவை

வேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின்

றாதியும் அந்தமு மாகிநின் றாளே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1219

 ஆகின்ற நாள்களில் ஐம்பத் தொருவர்கள்

ஆகிநின் றார்களில் ஆருயி ராமவள்

ஆகிநின் றாளுட னாகிய சக்கரத்

தாகிநின் றானவன் ஆயிழை பாடே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1220

 ஆயிழை யாளொடு மாதிப் பரனிடம்

ஆயதொ ரண்டவை யாறும் இரண்டுள

ஆய மனத்தொ றறுமுக மவைதனில்

ஏயவார் குழலி இனிதுநின் றாளே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1221 

 நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட

இன்றெ னகம்படி ஏழும் உயிர்ப்பெய்துந்

துன்றிய வோரொன் பதின்மருஞ் சூழலுள்

ஒன்றுயர் வோதி யுணர்ந்துநின் றாளே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1222

 உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே

மணந்தெழு மாங்கதி யாகிய தாகுங்

கொணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்

கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1223 

 ஆமது வங்கியும் ஆதியும் ஈசனும்

மாமது மண்டல மாருத மாதியும்

ஏமது சீவன் சிகையங் கிருண்டிடக்

கோமலர்க்கோதையுங் கோதண்ட மாகுமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1224

 ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி

ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்

ஆகும் பராபரை யோடப் பரையவள்

ஆகு மவள்ஐங் கருமத்தள் தானே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1225 

தானிதழ் மோகினி சார்வான யோகினி

போன மயமுடை யாரடி போற்றுவர்

ஆனவ ராவியி னாகிய வச்சிவந்

தானாம் பரசிவ மேலது தானே

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1226

 தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்

ஆனந்த மோகினி யாம்பொற் றிருவொடு

மோனையில் வைத்து மொழிதரு கூறது

வானவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1227

 மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி

யார்க்கும் அறிய வரியா ளவளாகும்

வாக்கு மனமும் மருவியொன் றாய்விட்ட

நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1228

  நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்

பின்னறி வாகும் பிரானறி வத்தடஞ்

செந்நெறி யாகுஞ் சிவகதி சேர்வார்க்குத்

தன்னெறி யாவது சன்மார்க்கமாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1229

  சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமுந்

துன்மார்க்க மானவை எல்லாந் துரந்திடும்

நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதுஞ்

சன்மார்க்கத் தேவியுஞ் சத்தியென் பாளே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1230

 சத்தியும் நானுஞ் சயம்புவும் அல்லது

முத்தியை யாரும் முதலறி வாரில்லை

அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கான்

மத்தியி லேற வழியது வாமே

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1231 

அதுவிது வென்றவ மேகழி யாதே

மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்

பதிமது மேவிப் பணியவல் லார்க்கு

விதிவழி தன்னையும் வென்றிட லாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1232

 வென்றிட லாகும் விதிவழி தன்னையும்

வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை

வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்

வென்றிடு மங்கைதன் மெய்யுணர்வோர்க்கே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1233

  ஓரைம் பதின்மருள் ஒன்றியே நின்றது

பாரம் பரியத்து வந்த பரமிது

மாரங் குழலாளும் அப்பதி தானுமுன்

சாரும் பதமிது சத்திய மாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1234

 சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்

வித்தது வின்றியே எல்லாம் விளைந்தன

அத்தகை யாகிய ஐம்பத் தொருவருஞ்

சித்தது மேவித் திருந்திடுவாரே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1235 

திருந்து சிவனுஞ் சிலைநுத லாளும்

பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த

அருந்திட அவ்விடம் ஆரமுதாக

இருந்தனள் தானங் கிளம்பிறை என்றே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1236

  என்றும் எழுகின்ற வேரினை எய்தினார்

தன்றது வாகுவர் தார்குழ லாளொடு

மன்றது கங்கை மதியொடு மாதவர்

துன்றிய தாரகை சோதிநின் றாளே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1237 

 நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட

ஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்தது

சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய

துன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1238

 தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி

ஈன்றிடு மாங்கவள் எய்திய பல்கலை

மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்

சான்றது வாகுவர் தாமவ ளாயுமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1239

 ஆயும் அறிவும் கடந்தணு வாரணி

மாயம தாகி மதோமதி யாயிடும்

சேய அரிவை சிவானந்த சுந்தரி

நேயம தாநெறி யாகிநின் றாளே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1240 

 நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்

பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடுங்

குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்

அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1241

 ஆமயன் மாலரன் ஈசன்மா லாங்கதி

ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்

தேமய னாளுந் தெனாதென என்றிடும்

மாமய மானது வந்தெய்த லாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1242

 வந்தடி போற்றுவர் வானவர் தானவர்

இந்து முதலாக எண்டிசை யோர்களும்

கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்

வந்தனை செய்யும் வழி நவில் வீரே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1243

  நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபங்

கவற்றிய கந்தங் கவர்ந்தெறி தீபம்

பயிற்றும் உலகினிற் பார்ப்பதி பூசை

அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1244

 தாங்கி உலகில் தரித்த பராபரன்

ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி

பூங்கிளி தங்கும் புரிகுழ லாளன்று

பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1245  

பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவார்

அற்கொடி மாதுமை யார்வத் தலைமகள்

நற்கொடி மாதை நயனங்கண் மூன்றுடை

விற்கொடி மாதை விரும்பி விளங்கே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1246  

விளங்கொளி யாய விரிசுடர் மாலை

துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்

களங்கொள் மணியுடன் காம வினோதம்

உளங்கொ ளிலம்பியம் ஒன்று தொடரே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1247

  தொடங்கி உலகினிற் சோதி மணாளன்

அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை

விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை

ஒடுங்கி யுமையொடும் ஓருரு வாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1248 

 உருவம் பலவுயி ராய்வல்ல நந்தி

தெருவம் புகுந்தமை தேர்வுற நாடிற்

புரிவளைக் கைச்சியெம்  பொன்னணி மாதை

மருவி இறைவன் மகிழ்வன மாயமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

 1249

மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்

தாயம் புணர்க்குஞ் சலதி அமலனைக்

காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்தி

ஆயம் புணர்க்குமவ் வியோனியு மாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1250

 உணர்ந்தொழிந் தேனவ னாமெங்கள் ஈசனைப்

புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யாரை

அணைந்தொழின் தேனெங்கள் ஆதிதன் பாதம்

பிணைந்தொழிந் தேன்றன் அருள்பெற்ற வாறே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1251 

 பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனி

நற்றாள் இறைவனே நற்பயனே என்பர்

கற்றான் அறியுங் கருத்தறி வார்கட்குப்

பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1252

  தனிநா யகன்றனோ டென்னெஞ்சம் நாடி

இனியார் இருப்பிடம் எழுல கென்பர்

பணியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்

கனியாய் நினைவதென் காரணம் அம்மையே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

  1253

  அம்மனை அம்மை அரிவை மனோன்மனி

செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும்

இம்மனை செய்த இந்நில(1) மங்கையும்

அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

1254

அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது

அம்மையும் அத்தனு மாரறி வாரென்னை

அம்மையோ டத்தனும் யானும் உடனிருந்

தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே. 

Comments