திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1255 to 1290 thirumoolar thirumandhiram shiva vishnu tv நான்காம் தந்திரம் 9. ஏரொளிச்‌ சக்கரம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1255  to 1290

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv

  நான்காம் தந்திரம்

  9. ஏரொளிச்‌ சக்கரம்‌

1255

ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்

ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்

ஏரொளி யக்கலை எங்கும் நிறைந்தபின்

ஏரொளிச் சக்கர மந்நடு  வன்னியே.

      SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

1256

வன்னி யெழுத்தவை மாபலம் உள்ளன

வன்னி யெழுத்தவை வானுற ஓங்கின

வன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம்

வன்னி யெழுத்திடு வாறது சொல்லுமே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1257 

சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாஞ்

சொல்லிடு மப்பதி யவ்வெழுத் தாவன

சொல்லிடு நூறொடு நாற்பத்து நாலுரு

சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1258 

மேல்வரும் விந்துவு மவ்வெழுத் தாய்விடும்

மேல்வரு நாதமும் ஓங்கும் எழுத்துடன்

மேல்வரு மப்பதி யவ்வெழுத் தேவரின்

மேல்வரு சக்கர மாய்வரு ஞாலமே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1259  

ஞாலம தாக விரிந்தது சக்கரம்

ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்

ஞாலம தாயிடு மப்பதி யோசனை

ஞாலம தாக விரிந்த தெழுத்தே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1260  

விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்

விரிந்த எழுத்தது சக்கரமாக

விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி

விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1261 

 அப்பது வாக விரிந்தது சக்கரம்

அப்பினில் அப்புறம் அவ்வன லாயிடும்

அப்பினில் அப்புறம் மாருத மாயெழ

அப்பினில் அப்புறம் ஆகாசமாமே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1262

 ஆகாச அக்கர மாவது சொல்லிடில்

ஆகாச அக்கரத் துள்ளே எழுந்தவை

ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்

ஆகாச அக்கர மாவ தறிமினே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1263 

அறிந்திடுஞ் சக்கரம் ஐயஞ்சு  விந்து

அறிந்திடுஞ் சக்கர நாத முதலா

அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி யோர்க்கும்

அறிந்திடும் அப்பக லோனிலை யாமே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

1264

அம்முதல் ஆறுமவ் வாதி எழுத்தாகும்

அம்முதல் ஆறுமவ் வம்மை எழுத்தாகும்

இம்முதல்  நாலும் இருந்திடு  வன்னியே

இம்முத லாகும் எழுத்தவை எல்லாம்.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

1265

 எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்

எழுத்தவை யாறது வந்நடு வன்னி

எழுத்தவை யந்நடு வச்சுட ராகி

எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1266 

 அந்தமும் ஈறு முதலா னவையற

அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்

அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்

அந்தமும் இந்துகை யாருட மானதே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1267

 ஆவின மானவை முன்நூற் றறுபது

மாவின மப்பதி னைந்தின மாயுறு

மாவின மப்பதி னெட்டுட னாயுறு

மாவின மக்கதி ரோன்வர வந்தே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1268

  வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை

வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும்

வந்திடு நாளது முன்னூற் றறுபதும்

வந்திடு ஆண்டு வகுத்துறை யவ்வியே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1269

 அவ்வின மூன்றுமவ் வாடது வாய்வருங்

கெவ்வின மூன்றுங் கிளர்தரு வேரதாஞ்

சவ்வின மூன்றுந் தழைத்திடுந் தண்டதாம்

இவ்வின மூன்றும் இராசிக ளெல்லாம்.  

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

1270  

இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின்

இராசியுட் சக்கர மென்றறி விந்துவாம்

இராசியுட் சக்கர நாதமும் ஒத்தபின்

இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1271

  நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெல்லாம்

நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்

நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரில்

நின்றிடு மப்புறந் தாரகை யானதே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1272

  தாரகையாகச் சமைந்தது சக்கரந்

தாரகை மேலோர் தழைத்தது பேரொளி

தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்

தாரகை தாரகை தாரகை கண்டதே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1273 

 கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாங்

கண்டிடு நாதமுந் தன்மேல் எழுந்திடக்

கண்டிடு வன்னிக் கொழுந்தன வொத்தபின்

கண்டிடு மப்புறங் காரொளி யானதே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1274 

 காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்

பாரொளி நீரொளி சாரொளி காலொளி

வானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின்

நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1275 

 நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்

நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட

நின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும்

நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1276

  விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடின்

விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்

விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில்

விந்துவை எண்மடி கொண்டது வீசமே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1277

 வீசம் இரண்டுள நாதத் தெழுவன

வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற

வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்

வீசமும் விந்து விரிந்தது காணுமே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1278

 விரிந்தது விந்துவுங் கெட்டது வீசம்

விரிந்தது விந்துவும் நாதத் தளவு

விரிந்தது வுட்கட்ட எட்டெட்டு மாகில்

விரிந்தது விந்து விரையதுவாமே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1279 

 விரையது விந்து விளைந்தன எல்லாம்

விரையது விந்து விளைந்த உயிரும்

விரையது விந்து விளைந்தவிஞ்  ஞாலம்

விரையது விந்து விளைந்தவன்  தாளே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1280 

 விளைந்த எழுத்தவை விந்துவும் நாதமும்

விளைந்த எழுத்தவை சக்கரமாக

விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்

விளைந்த எழுத்தவை மந்திர மாமே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1281

மந்திரஞ் சக்கர மானவை சொல்லிடில்

தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்

தந்திரத் துள்ளு மிரேகையில் ஒன்றில்லை

பந்தம தாகும் பிரணவம் உன்னிடே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1282

  உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்

பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை

தன்னிடத் டெழுந்த தகைப்புறப் பின்னிற்கப்

பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1283

 பார்க்கலு மாகும் பகையறு சக்கரங்

காக்கலு மாகுங் கருத்தில் தடமெங்கும்

நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள்

ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1284

 அறிந்திடுஞ் சக்கர மாதி யெழுந்து

விரிந்திடுஞ் சக்கர மேலெழுத் தம்மை

பரிந்திடுஞ் சக்கரம் பாராங்கி நாலும்

குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1285 

 கூறிய சக்கரத் துள்ளெழு மந்திரம்

மாறியல் பாக அமைந்து விரிந்திடுந்

தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண

மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே. 

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1286 

 மதித்திடும் அம்மையும் மாமாது மாகும்

மதித்திடும் அம்மையு மங்கனல் ஒக்கும்

மதித்தங் கெழுந்தவை காரண மாகில்

கொதித்தங் கெழுந்தவை கூடகிலாவே.  

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

1287

 கூடிய தம்பனம் மாரணம் வசியம்

ஆடியல் பாக அமைந்து செறிந்திடும்

பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்

நேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1288

  தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே

அளிந்த வகாரத்தை யந்நடு வாக்கிக்

குளிர்ந்த1 வரனைக் கூடியுள் வைத்து

வளிந்தவை யங்கெழு நாடிய காலே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

1289

  காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்

ஆலித் தெழுந்தமைந் தூறி எழுந்ததாய்ப்

பாலித் தெழுந்து பகையற நின்றபின்

மாலுற்ற மந்திர மாறிக்கொள் வார்க்கே.

     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  1290

 கொண்ட இம்மந்திரங் கூத்தன் எழுத்ததாய்ப்

பண்டையுள் நாவிற் பகையற விண்டபின்

மன்றுள் நிறைந்த மணிவிளக் காயிடும்

இன்றும் இதயத் தெழுந்து நமவெனே. 

Comments