திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1306 to 1318 thirumoolar thirumandhiram shiva vishnu tv நான்காம் தந்திரம் 12. புவனாபதிச்‌ சக்கரம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1306  to 1318

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv




  நான்காம் தந்திரம் 

12. புவனாபதிச்‌ சக்கரம்‌


1306


ககராதி யோரைந்துங் காணிய பொன்மை

அகராதி யோரா றரத்தமே போலும்

சகராதி யோர் நான்குந் தான்சுத்த வெண்மை

ககராதி மூவித்தை காமிய முத்தியே. 

     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 1307 

 ஓரில் இதுவே உரையும்இத் தெய்வத்தைத்

தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்

வாரித் திரிகோண மாவின்ப முத்தியுந்

தேரில் அறியுஞ் சிவகாயந் தானே. 

     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 1308

 ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே

யாகம் பராவித்தை யாமுத்தி சித்தியே

ஏகம் பராசத்தி யாகச் சிவகுரு

யோகம் பராசத்தி உண்மைஎட்டாமே. 

     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 1309

  எட்டா கிய சத்தி1 எட்டாகும் யோகத்துக்

கட்டாகு  நாதாந்தத் தெட்டுங் கலப்பித்த

தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்தது

கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


1310

 ஏதும் பலமா மியந்திரா சன்னடி

ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு

நீதங்கும் அங்க நியாசந் தனைப் பண்ணிச்

சாதங் கெடச் செம்பிற் சட்கோணந் தானிடே.

     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV



  1311

 சட்கோணந் தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தானிட்டு

அக்கோண மாறின் தலையில்ரீங் காரமிட்

டெக்கோண முஞ்சூழ எழில்வட்டம் இட்டுப்பின்

மிக்கீரெட் டக்கர மம்முதன் மேலிடே.

     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  1312 

இட்ட இதழ்கள் இடையந் தரத்திலே

அட்டஹவ் விட்டிட்டதின் மேலே உவ்விட்டுக்

கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்

இட்டுவா மத்தாங் கிரோங்கென்று மேவிடே. 

     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV



 1313

  மேவிய சக்கர மீது வலத்திலே

கோவையடைவே குரோங்சிரோங் கென்றிட்டுத்

தாவில்ரீங் காரத்தாற் சக்கரஞ் சூழ்ந்து

பூவைப் புவனா பதியைப்பின் பூசியே. 

     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 1314  

பூசிக்கும் போது புவனா பதிதன்னை

ஆசற் றகத்தினில் ஆவா கனம் பண்ணிப்

பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து

தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  1315  

செய்ய திருமேனி செம்பட் டுடைதானுங்

கையிற் படையங் குசபாசத் தோடபயம்

மெய்யில் அணிகலன் இரத்தின மாமேனி

துய்ய முடியும் அவயவத் தோற்றமே. 


 1316

  தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப்

பாற்போ னகமந் திரத்தாற் பயின் றேத்தி

நாற்பால நாரதா யைசுவா காஎன்று

சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப்பின் சேவியே.

     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  1317 

 சேவிப் பதன்முன்னே தேவியையுத் வாகனத்தாற்

பாவித் திதய கமலம் பதிவித்தங்

கியாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை

நீவைத்துச் சேமி நினைத்தது தருமே. 

Comments