திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1419 to 1422 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 1. சுத்த சைவம்

 


திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1419  to 1422

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஐந்தாம்‌ தந்திரம்‌

  1. சுத்த சைவம் 



1419

ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற

பேரறி வாளன் பெருமை குறித்திடின்

மேருவும் மூவுல காளி யிலங்கெழுந்

தாரணி நால்வகைச் சைவமு மாமே.


  1420

சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு

சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த

சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்ற

நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே.


1421

  கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்

முற்பத ஞான முறைமுறை நண்ணியே

சொற்பத மேவித் துரிசற்று மேலான

தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.


  1422

  வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த

நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்

பூதாந்த போதாந்த மாகப் புனஞ்செய்ய

நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.  

Comments