திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1423 to 1426 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 2. அசுத்த சைவம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1423  to 1426

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv



  ஐந்தாம்‌ தந்திரம்‌

 2. அசுத்த சைவம்‌



1423

இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத்

திணையார் இணைக்குழை யீரணை முத்திரை

குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா

தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 1424 

 காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்

தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்

சோதனை செய்து துவாதெச மார்க்கராய்

ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 1425

  கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்

கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்

கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்

கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV  


 1426 

 ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்

மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்

ஏனை நிலமும் எழுதா மறையீறுங்

கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே. 

Comments