திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1438 to 1442 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 4. கடுஞ்‌ சுத்த சைவம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1438  to 1442

  thirumoolar thirumandhiram

  shiva vishnu tv



  ஐந்தாம்‌ தந்திரம்‌

  4. கடுஞ்‌ சுத்த சைவம்‌


1438

வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேவி 

ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்

பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்

சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV  

  1439 

 உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து

மடலான மாமாயை மற்றுள்ள நீவப்

படலான கேவல பாசந் துடைத்துத்

திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV  

 1440  

சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்

முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்

அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்

சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV  

  1441

 நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே

தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்

தானென்று நானென்ற தத்துவ நல்கலால்

தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV  

 1442 

 சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்

ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்

மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்

பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.  




Comments