திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1495 to 1501 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 11. சற்புத்திர மார்க்கம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1495  to 1501

  thirumoolar thirumandhiram 

  shiva vishnu tv 



  ஐந்தாம்‌ தந்திரம்‌

  11. சற்புத்திர மார்க்கம் 


1495

மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில்

தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில்

ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்

தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


  1496 

 பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்

ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை

நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மற்

றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

1497

 அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்

மறுகா நரையன்னந் தாமரை நீலங்

குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ்

சிறுகால் (1)அறநெறி சேரகி லாரே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


1498

 அருங்கரை யாவது அவ்வடி நீழற்

பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை

வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம்

ஒருங்கரை யாயுல கேழினொத் தானே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

1499

 உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி

வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்

பயந்தும் பிறவிப் பயனது வாகும்

பயந்து பிரிக்கிலப் பான்மைய னாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1500

  நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை

என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்

துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ்

சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  1501

திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை

உருமன்னி வாழும் உலகத்தீர்கேண்மின்

கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது

இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே.  

Comments