திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1502 to 1506 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 12. தாச மார்க்கம்‌

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 1502  to 1506

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஐந்தாம்‌ தந்திரம்‌

  12. தாச மார்க்கம்‌



1502

எளியனல் தீப மிடல்மலர் கொய்தல்

அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்

பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி

தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே. 

  SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV  

 1503

  அதுவிது வாதிப் பரமென் றகல்வர்

இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை

விதிவழி யேசென்று வேந்தனை நாடு

மதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே. 


 1504

  அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு

சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்

வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்

வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே. 


 1505

  அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி

உன்னுவர் உள்மகிழ்ந்துண்ணின் றடிதொழக்

கண்ணவ னென்று கருது மவர்கட்குப்

பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.


 1505

 வாசித்தும் பூசித்தும்மாமலர் கொய்திட்டும்

பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின்

மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை

நேசத் திருந்த நினைவறி யாரே. 

Comments