திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1550 to 1556 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 19. நிராகாரம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1550 to 1556 

thirumoolar thirumandhiram

 shiva vishnu tv

  ஐந்தாம்‌ தந்திரம்‌

 19. நிராகாரம்‌

1550

இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு

சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி

யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்

கமையறிந் தாருட் கலந்துநின் றானே. 

    SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV   

 1551 

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி

தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்

நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்

ஏங்கி உலகில் இருந்தழு வாரே. 

    SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV 

 1552

  இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும்

அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்

வருந்தா வகைசெய்து வானவர் கோனும்

பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே. 

    SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV 

 1553

  தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்

பாரறி வாளர் படுபயன் றானுண்பர்

காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்

நீரறி வார்நெடு மாமுகி லாமே. 

    SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV 

 1554

 அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி

பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்

குறியது கண்டுங் கொடுவினை யாளர்

செறிய நினைக்கிலர் சேவடி தானே. 

    SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV 

 1555

 மன்னும் ஒருவன் மருவு மனோமயன்

என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்

துன்னி மனமே தொழுமின் துணையிலி

தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

    SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV 

  1556

 ஓங்காரத் துள்ளளி உள்ளே உதயமுற்

றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்

சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்

நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.  

Comments