திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1633 to 1644 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஆறாம்‌ தந்திரம்‌ 6. தவ தூடணம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1633 to 1644 

thirumoolar thirumandhiram 

shiva vishnu tv

  ஆறாம்‌ தந்திரம்‌

  6. தவ தூடணம்‌

1633

ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்

காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற்

சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்

போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

 1634 

 கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்

சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்

சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்

சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

  1635

  விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்

விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்

விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்

விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

1637

  கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்

தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி

வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்

தூடிற் பலவுல கோரெத் தவரே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

  1638 

மனத்துறை மாகடல் ஏழுங் கைநீந்தித்

தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார்

பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்

முகத்திடை நந்தியை முந்தலு மாமே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

1639  

மனத்திடை நின்ற மதிவாள் உருவி

இனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப்

புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்

தவத்திடை யாறொளி தன்னொளி யாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

 1640 

 ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது

பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ

முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ்

சத்தான செய்வது தான்தவந் தானே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

  1641

  இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி

மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன்

தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந்

தலைதொட்டுக் கண்டேன் தவங்கொண்ட வாறே.

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

  1642

 படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்

கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்

இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில்

உடரடை செய்வ தொருமனத் தாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

 1643 

ஆற்றிற் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்

ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்

நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்

சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

1644

 பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்

குழக்கன்று துள்ளியக் கோணியைப் புல்காக்

குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்

இழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

 1645

 சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்

சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்

சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ்

சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே.  

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

Comments