திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1655 to 1660 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஆறாம்‌ தந்திரம்‌ 8. அவ வேடம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1655 to 1660

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஆறாம்‌ தந்திரம்‌

  8. அவ வேடம்‌


1655

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்

வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்

தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV   

 1656 

 ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை

ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்

மான நலங்கெடும்  அப்புவி யாதலால் 

ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே.

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV   


 1657

  இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள

நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம்

என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின்

மன்பதை செப்பஞ்  செயின்வையம் வாழுமே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV   

 1658

  இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த

வழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப்

பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்

கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV   


 1659

 பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்

பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்

பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்

சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV   

 1660

 பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக

மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர்

பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்

உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே. 


  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV   

Comments