திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1661 to 1664 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஆறாம்‌ தந்திரம்‌ 9.தவ வேடம்‌

  திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1661 to 1664

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஆறாம்‌ தந்திரம்‌

  9.தவ வேடம்‌


1661

தவமிக் கவரே தலையான வேடர்

அவமிக் கவரே யதிகொலை வேடர்

அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்

தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 

   SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV   

 1662

  பூதி யணிவது சாதன மாதியிற்

காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை

ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்

தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 

 SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1663

  யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி

தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்

றாகத்து நீறணி யங்கக் கபாலஞ்

சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.  

 SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

1664

 காதணி குண்டலங் கண்டிகை நாதமும்

ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை

ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்

ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 

Comments