திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1668 to 1675 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஆறாம்‌ தந்திரம்‌ 11. ஞானவேடம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1668 to 1675

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஆறாம்‌ தந்திரம்‌

 11. ஞானவேடம்‌


1668

ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர்

ஞானமுள்ளார்வேடம்இன்றெனில்நன்முத்தர்

ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால்

ஞானமுள வேட நண்ணிநிற் பாரே.

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


  1669

  புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை

நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்

துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்

பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1670

 சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும்

அவமான சாதனம் ஆகாது தேரில்

நவமா மவர்க்கது சாதன நான்கும்

உவமான மில்பொருள் உள்ளுற லாமே.

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  1671

  சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற்

கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்

ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே

செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 1672

  அடியா ரவரே யடியா ரலாதார்

அடியாரு மாகார்அவ் வேடமு மாகா

அடியார் சிவஞான மானது பெற்றோர்

அடியா ரலாதார் அடியார்கள் அன்றே. 

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1673

  ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந்

தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே

ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம்

ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.  

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

1774

  ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி

தானத்தில் வைத்த தனியால யத்தனாம்

மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்

ஏனைத் தவசி இவனென லாகுமே.

  SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  1775

  தானற்ற தன்மையுந் தானவ னாதலும்

ஏனைய வச்சிவ மான இயற்கையுந்

தானுறு சாதக முத்திரை சாத்தலு

மேனவும் நந்தி பதமுத்தி பெற்றதே.  

Comments