திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1676 to 1679 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஆறாம்‌ தந்திரம்‌ 12, சிவ வேடம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1676 to 1679

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஆறாம்‌ தந்திரம்‌

 12, சிவ வேடம்‌


1676

அருளால் அரனுக் கடிமைய தாகிப்

பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி

இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்

தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. 

  SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV    

 1677

  உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா

உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்

உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார்

கடலில் அகல்பட்ட கட்டையொத் தாரே.  

  SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV 

1678

 மயலற் றிருளற்று மாமன மற்றுக்

கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத்

தயலற் றவரோடும் தாமே தாமாகிச்

செயலற் றிருப்பார் சிவவேடத் தாரே.  

  SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV 

1679

 ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்

வேடங்கொண் டென்செய்வீர் வேண்டாமனிதரே

நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்

தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே.  

Comments