திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1773 to 1777 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 7. சிவலிங்கம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 1773  to 1777

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv



  ஏழாம்‌ தந்திரம்‌

  7. சிவலிங்கம்‌


1773

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்

பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்

நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை

வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே.

  SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   


  1774

  வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு

நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி

உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்

புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே.

  SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   

  1775

 ஒன்றெனக் கண்டேயெம் ஈசன் ஒருவனை

நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ

வென்றுஐம் புலனும் மிகக்கிடந்து இன்புற

அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே. 

  SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   


 1776  


மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்

பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்

நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்

பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.  

  SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   

1777 

 மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று

ஆவி எழும்அள வன்றே உடலுற

மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்

பாவித்து அடக்கிற் பரகதி தானே.  

Comments