திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1886 to 1891 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 16. பிட்சா விதி

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1886  to 1891

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv 

 ஏழாம்‌ தந்திரம்‌

   16. பிட்சா விதி

1886

விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு

உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது

அச்சம்கெட்டு அச்செயல்1 அறுத்துண்ண மாட்டாதார்

இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

1887

பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்

பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்

பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்

பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

 1888  

பரந்துலகு ஏழும் படைத்த பிரானை

இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்

நிரந்தர மாக நினையும் அடியார்

இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

1889

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்

தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்

பொரஇருந் தான்புக லேபுக லாக

வரஇருந் தால்அறி யான்என்ப தாமே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

  1890

 அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்

தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப்

பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்

தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

1891

 மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்

கையகம் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர்

ஐயம் புகாமல் இருந்த தவசியர்

வையகம் எல்லாம் வரஇருந்தாரே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

Comments