திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1988 to 1992 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 24. மனவாதித்தன்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1988  to 1992 

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌

   24.  மனவாதித்தன் 


1988

எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்

எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப

விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி

ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே. 

SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 1989

 சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை

முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை

அந்த இரண்டும் உபய நிலத்தில்

சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.

SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


  1990 

 ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி

ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்

ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற

ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே.  

SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


1991 

 ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி

ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது

பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்றது 

ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே. 

SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


 1092  

ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்

ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை

முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்

இன்பம் இலார்இருள் சூழநின் றாரே.  


SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 

Comments