திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1993 to 2000 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 25. ஞானாதித்தன்

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 1993  to 2000

  thirumoolar thirumandhiram

  shiva vishnu tv



  ஏழாம்‌ தந்திரம்‌

   25.  ஞானாதித்தன் 



1993

விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து

அந்த அபரம் பரநாத மாகியே

வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து

உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 1994

  உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்

தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்

வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு

உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே.


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

   1995

  தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்

மூவர் பிரான்என முன்னொரு காலத்து

நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்

மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே.


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

   1996 

 பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை

மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு

செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்

கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே.


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  1997 

 தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க

அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்

கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்

நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

   1998 

 நேரறி வாக நிரம்பிய பேரொளி

போரறி யாது புவனங்கள் போய்வரும்

தேரறி யாத திசையொளி யாயிடும்

ஆரறி வாரிது நாயக மாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


  1999

 மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்

கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும்

சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்

நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2000

நாபிக்கண் நாசிநயன நடுவினும்

தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்

தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்

மூவரு மாக உணர்ந்திருந் தாரே.  


திருமூலர் அருளிய திருமந்திரம்  பாடல்கள் - 1988  to 1992  thirumoolar thirumandhiram shiva vishnu tv  ஏழாம்‌ தந்திரம்‌   24.  மனவாதித்தன் 

https://www.shivavishnutv.com/2024/01/1988-to-1992-thirumoolar-thirumandhiram.html


திருமூலர் அருளிய திருமந்திரம்  பாடல்கள் - 1985  to 1987  thirumoolar thirumandhiram shiva vishnu tv  ஏழாம்‌ தந்திரம்‌   23. பிண்டாதித்தன் 


https://www.shivavishnutv.com/2024/01/1985-to-1987-thirumoolar-thirumandhiram.html



Comments