திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2007 to 2010 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 28. புருடன்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2007  to 2010

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌

   28. புருடன் 


2007

 வைகரி யாதியும் மாயா மலாதியும்

பொய்கரி யான புருடாதி பேதமும்

மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்

செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2008 

  அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

2009  

 படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்

சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய

இடர்கொண்ட பாச இருளற ஓட்டி

நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2010 

 அணுவுள் அவனும் அவனுள் அணுவும்

கணுஅற நின்ற கலப்பது உணரார்

இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்

தணிவற நின்றான் சராசரம் தானே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

Comments