திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2017 to 2022 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஏழாம்‌ தந்திரம்‌ 31. போதன்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2017  to 2022

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஏழாம்‌ தந்திரம்‌

   31.  போதன்


2017


சீவன் எனச்சிவன் என்னவே றில்லை

சீவ னார்சிவ னாரை அறிகிலர்

சீவ னார்சிவ னாரை அறிந்தபின்

சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

  2018

  குணவிளக் காகிய கூத்தப் பிரானும்

மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்

பணவிளக் காகிய பல்தலை நாகம்

கணவிளக் காகிய கண்காணி யாகுமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2019

  அறிவாய் அறியாமை நீங்கி யவனே

பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்

அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்

செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 


 2020 

ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு

ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி

ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்

ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே. 


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2021

  சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்

அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்

தவமான செய்து தலைப்பறி கின்றார்

நவமான தத்துவம் நாடகி லாரே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

 2022  

நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உன்னார்

நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்

நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்

நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV 

Comments