திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2506 to 2511 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 29. உபசாந்தம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2506  to 2511

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 29.  உபசாந்தம் 


2506

முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே

பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே

சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்

சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 2507 

 காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்

காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி

காரிய காரண வாதனைப் பற்றறப்

பாரண வும் உப சாந்தப் பரிசிதே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


2508

  அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்

முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி

மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்

தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


2509

 ஆறாற மைந்துஆண வத்தையுள் நீக்குதல்

பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி

கூறாத சாக்கிரா தீதம் குருபரன்

பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


  2510

 வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய்

ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்

தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே

ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  


 2511

 பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்

திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று

உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்

கரைகண் டானுரை அற்ற கணக்கிலே.  


SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV  

Comments