திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2537 to 2545 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV எட்டாம் தந்திரம் 32. நவாவத்தை நவாபிமானி

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2537  to 2545 

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  எட்டாம் தந்திரம்

 32. நவாவத்தை நவாபிமானி


2537

தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்

நற்பத விராட்டன்பொன் கெற்பனவ் யாகிர்தன்

பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்

பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  2538

  நவமாம் அவத்தை நனவாதி பற்றிற்

பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத்

தவமான சத்திய ஞானப் பொதுவிற்

றுவமார் துரியஞ் சொருபம தாமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2539 

 சிவமான சிந்தையிற் சீவன் சிதைய

பவமான மும்மலம் பாறிப் பறிய

நவமான அந்தத்தின் நற்சிவ போதந்

தவமான மவையாகித் தானல்ல வாகுமே. 

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 2540

 முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந்

தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள

பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்

தன்செய்த வாண்டவன் றான்சிறந் தானே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  2541

 உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம்

பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி

அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும்

இகந்தன வல்வினை யோடறுத் தானே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


2542 

நலம்பல காலந் தொகுத்தன நீளங்

குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும்

பலம்பல பன்னிரு கால நினையும்

நிலம்பல வாறினன் நீர்மையன் றானே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


2543 

 ஆதி பராபர மாகும் பராபரை

சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்

ஓதுங் கமைமாயே யோரிரண் டோர்முத்தி

நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  2544

  தேராத சிந்தை தெளியத் தெளிவித்து

வேறாத நரக சுவர்க்கமும் மேதினி

ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்

வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே.

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  2545

 ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி

நன்பாற் பயிலு நவதத் துவமாதி

ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்

செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே.  

SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


Comments