திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2649 to 2655 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 1. குருமட தரிசனம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2649  to 2655

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  ஒன்பதாம் தந்திரம்

 1. குருமட  தரிசனம் 


2649

பலியும் அவியும் பரந்து புகையும்

ஒலியும் எம் ஈசன் தனக்கென்றே உள்கிக்

குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்

தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2650 

 இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை

அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்

அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்

அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  2651

 நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்

கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி

தேட அரியன் சிறப்பிலி எம்இறை

ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2652 

 இயம்புவன் ஆசனத் தோடு மலையும்

இயம்புவன் சித்தக் குகையும் இடமும்

இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்

இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  2653

 முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்

அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி

அகம்பர மாதனம் எண்எண் கிரியை

சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2654

  அகமுக மாம்பீடம் ஆதார மாகும்

சகமுக மாம்சத்தி யாதன மாகும்

செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்

அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  2655

  மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்

காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே

தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்

ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே.  


 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV

Comments