திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2732 to 2738 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 8.3. சுந்தரக் கூத்து

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2732  to 2738

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV

  ஒன்பதாம் தந்திரம்

 8.3. சுந்தரக் கூத்து

2732

அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்

உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்

கண்டம் கரியான் கருணை திருவுருக்

கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

2733

  கொடுகொட்டி பாண்டரங் கோடுசங் காரம்

நடம் எட்டோ டு ஐந்துஆறு நாடியுள் நாடும்

திடம்உற்று ஏழும்தேவ தாருவாம் தில்லை

வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

2734

   பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்

பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்

பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்

பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

2735

  அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்

தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்

சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்

பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

2736

  ஆனத்தி யாடிபின் நவக் கூத்தாடிக்

கானத்தி யாடிக் கருத்தில் தரித்தாடி

மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா

ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

2737

   சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்

முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்

சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்

சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

2738

  மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்

தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்

தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்

ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV

Comments