திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 441 to 450 thirumoolar thirumandhiram shiva vishnu tv இரண்டாம் தந்திரம் 13. அருளல்

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள்   - 441 to 450 

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


இரண்டாம் தந்திரம் 

13. அருளல் 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

441

 எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு                                                                                  

வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்

ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை

கட்டி அவிழ்ப்பன்1 கண்ணுதல் காணுமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 

442

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை

நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை

விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்

தச்சு மவனே சமைக்கவல் லானே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

443

  குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்1

குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்1

குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்

அசைவில் உலகம் அதுயிது வாமே

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 

444

விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப்

படையுடை யான்பரி சேஉல காக்குங்

கொடையுடை யான்குணம் எண்குண மாகுஞ்

சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

445

   உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்

உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி

உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்

உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

446

   படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்

படைத்துடை யான்பல தேவரை முன்னே

படைத்துடை யான்பல சீவரை முன்னே

படைத்துடை யான்பர மாகிநின் றானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

447

  ஆதி படைத்தனன் ஐம்பெரும்1 பூதம்2

ஆதி படைத்தனன்1 ஆசில்பல் ஊழி3

ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை1

ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.1

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


448

   அகன்றான் அகலிடம்1 ஏழுமொன் றாகி

இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்

சிவன்றான் பலபல சீவனும்2 ஆகி

நவின்றான் உலகுறு நம்பனு மாமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 

449

  உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்

விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்

மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்

கண்ணின்ற மாமணி மாபோத மாமே.1

     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

450

 ஆரும் அறியாத அண்டத் திருவுருப்

பார்முத லாகப் பயிலுங் கடத்திலே

நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்

சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.  

Comments