திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 509 to 514 thirumoolar thirumandhiram shiva vishnu tv இரண்டாம் தந்திரம் 18. தீர்த்தம்

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் -   509 to 514

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv

இரண்டாம் தந்திரம்

 18. தீர்த்தம் 

509

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பரந்து திரிவரே

கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  510

 தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்

குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்

வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்

தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  511

 உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்

கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை

வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்

பள்ளத்தில் இட்டதோர் பந்தருள்* ளானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

512

  அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்

செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்

மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்

பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 513

  கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்.

உடலுற்றுத்1 தேடுவார் தம்மைஒப் பாரிலர்

திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று

உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

514

 கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்

கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்

கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்

கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.  6

Comments