திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 530 to 536 thirumoolar thirumandhiram shiva vishnu tv இரண்டாம் தந்திரம் 22. குருநிந்தை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   530 to 536

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv




     இரண்டாம் தந்திரம்   

      22.  குருநிந்தை 


530

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்

உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்

கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்

பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 531

 ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய

சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்

ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம்

வாரிடைக் கிருமியாய்1 மாய்வர் மண்ணிலே.2

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 532

  பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்

சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்

அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்1

சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே2

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 



 533 

 மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்

சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்

பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு 

வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 534 

 ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்

தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்

வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்

நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


535 

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்

நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது

தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்

பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 536

 கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு

வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்

கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்

கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே. 

Comments