திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 539 to 542 thirumoolar thirumandhiram shiva vishnu tv இரண்டாம் தந்திரம் 24. பொறையுடைமை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   539 to 542

  thirumoolar thirumandhiram 

  shiva vishnu tv





   இரண்டாம் தந்திரம்   

   24. பொறையுடைமை 



539

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு

முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்1

தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்

வற்றா தொழிவது மாகமை யாமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

540  

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்

பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய

மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்

ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

541

 ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்

சேனை வளைந்து திசைதொறும் கைதொழ

ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை

ஏனை விளைந்தருள்1 எட்டலு மாமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

542

 வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்

பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்

கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு

எல்லையி லாத இலயம்உண் டாமே.  

Comments