திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 543 to 548 thirumoolar thirumandhiram shiva vishnu tv இரண்டாம் தந்திரம் 25. பெரியாரைத் துணைக் கோடல்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   543 to 548 

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv




                                                     இரண்டாம் தந்திரம்  

                                          25. பெரியாரைத் துணைக் கோடல் 


543

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்

பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்

தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்

கூடவல் லாரடி கூடுவன் யானே.

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  544 

 தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்

மாமனத்து அங்குஅன்பு வைத்தது இலையாகும்

நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே

போமிடத் து என்னொடும் போதுகண் டாயே.


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  545

அறிவார் அமரர் தலைவனை நாடிச்

செறிவார் பெறுவர் சிலர்தத்1 துவத்தை

நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்

பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே.

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

546

 தார்சடை யான்தன் தமராய் உலகினில்

போர் புகழான் எந்தை பொன்னடி சேருவர்

வாயடை யாவுள்ளம் தேர்வார்க்கு அருள்செய்யும்

கோவந்தடைந் து அந்நெறி கூடலு மாமே.  

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

547  

உடையான் அடியார் அடியா ருடன்போய்

படையார் அழலான் பதிசென்று புக்கே

கடையார நின்றவர் கண்டறி விப்ப

உடையான் வருகென ஓலம் என் றாரே. 

SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 548

 அருமைவல் லான்கலை ஞானத்துள்1 தோன்றும்

பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்

உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்

திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.


SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


                                             இரண்டாம் தந்திரம் முற்றிற்று  

Comments