திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 549 to 552 thirumoolar thirumandhiram shiva vishnu tv மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   549 to 552

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv





     மூன்றாம் தந்திரம் 

      1. அட்டாங்க யோகம் 

549

உரைத்தன வற்கரி ஒன்று முடிய

நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்

பிரச்சதம் எட்டும்முன் பேசியே நந்தி

நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

550

 செய்த இயம நியமஞ் சமாதிசென்

றுய்யப் பராசத்தி உத்தர பூருவ

மெய்த கவச நியாசங்கள் முத்திரை

எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 551  

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்

தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்

நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்

புன்னெறி 1யாகத்திற் போக்கில்லை யாகுமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


552 

இயம நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணாயாமம் 1பிரத்தி யாகாரஞ்

சயமிகு தாரணை தியானஞ் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவது மாமே.



Comments