திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 588 to 597 thirumoolar thirumandhiram shiva vishnu tv மூன்றாம் தந்திரம் 7. தாரணை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -   588 to 597

  thirumoolar thirumandhiram

  shiva vishnu tv





                                                                 மூன்றாம் தந்திரம் 

                                                                       7. தாரணை 

588

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி

வீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்

காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு

வாணாள் அடைக்கும் வழியது வாமே 


 589

  மலையார் சிரத்திடை வானீர் அருவி

நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே

சிலையார் பொதுவில் திருநட மாடுந்

தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே  



590

  மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை

மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை

ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்

பாலனும் ஆவான் 1பராநந்தி ஆணையே



591

  கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி

இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி

மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்

குடையாமல் ஊழி இருக்கலு மாமே 


 592

  கலந்த உயிருடன் காலம் அறியில்

கலந்த உயிரது காலின் நெருக்கங்

கலந்த உயிரது காலது கட்டிற்

கலந்த உயிருடல் காலமும் நிற்குமே  


593

  வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு

வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்

வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்

கோய்திற வாவிடிற் கோழையுமாமே  



594

  வாழலு மாம்பல காலும் மனத்திடைப்

போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்

எழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்

பாழி பெரியதோர் பள்ளி அறையே 



 595

  நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்

இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்

வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்

குரங்கினைக் 1கொட்டை பொதியலு மாமே




 596

  முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்

பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்

முன்னுறு கோடி உறுகதி பேசிடில்

என்ன மாயம் இடிகரை நிற்குமே  



597

  அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்

பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து

தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்

தரித்தது தாரணை தற்பரத் தோடே  10

Comments