திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 598 to 617 thirumoolar thirumandhiram shiva vishnu tv மூன்றாம் தந்திரம் 8. தியானம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -  598 to 617

  thirumoolar thirumandhiram

  shiva vishnu tv

 மூன்றாம் தந்திரம

 8. தியானம்

598

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்

பொருவாத புந்தி புலன்போக மேவல்

உருவாய சத்தி பரத்தியான முன்னுங்

குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 599 

 கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்

பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு)

அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்

1புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

600

 ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்

கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்

விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்

பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 601  

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை

ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை

ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை

ஒருபொழு துன்னார் சந்திரப் 1பூவே

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

602

  மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்

சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி

அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட

மனத்து விளக்கது மாயா விளக்கே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

603

 எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்

கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை

உண்ணாடிக் குள்ளே ஒளியுற 1நோக்கினால்

கண்ணாடி போலக் 2கலந்துநின் றானே

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 604 

 நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்

வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை

ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை

தேட்டமும் இல்லை சிவனவ னாமே

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

605

  நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்

டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்

துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்

பயனிது காயம் பயமில்லை தானே 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 606  

மணிகடல் யானை 1வார்குழல் மேகம்

அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்

தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்

பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 607 

கடலொடு மேகங் களிறொடும் ஓசை

அடவெழும் வீணை அண்டரண் டத்துச்

1சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை

திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே

     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

608

  ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்

பாசம் இயங்கும் பரிந்துய ராய்நிற்கும்

ஓசை யதன்மணம் போல விடுவதோர்

ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

609

  நாத முடிவிலே நல்லாள் இருப்பது

நாத முடிவிலே நல்யோகம் இருப்பது

நாத முடிவிலே நாட்டம் இருப்பது

நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

610

  உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்

துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி

அதிக்கின்ற 1ஐவருள் நாதம் ஒடுங்கக்

கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

611

 பள்ளி அறையிற் பகலே இருளில்லை

கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்

ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது

வெள்ளி அறையில் விடிவில்லை தானே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

612

 கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்

தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு

மண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்

பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 613  

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு

அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்

அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்

அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

614

 இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே

முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்

துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்

இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

615

  முக்குண மூடற வாயுவை மூலத்தே

சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்

தக்க வலமிடம் நாழிகை சாதிக்க

வைக்கும் உயர்நிலை வானவர் கோனே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

616 

 நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே

மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே

கடலித் திருந்து கருதவல் லார்கள்

சடலத் தலைவனைத் தாமறிந் தாரே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

617 

 அறிவாய1 சத்தென்னு மாறா றகன்று

செறிவான மாயை சிதைத்தரு ளாலே

பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி

நெறியான அன்பர் நிலையறிந் தாரே

#thirumandhiram #thirumoolar

Comments