திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 632 to 639 thirumoolar thirumandhiram shiva vishnu tv மூன்றாம் தந்திரம் 10. அட்டாங்க யோகப் பேறு

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் -  632 to 639 

 thirumoolar thirumandhiram 

shiva vishnu tv




 மூன்றாம் தந்திரம்


 10. அட்டாங்க யோகப் பேறு  



632

இயமம்போதுகந் தேறும் புரிசடை யானடி

யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்

ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு

மாதுகந் தாடிடு மால்விடை யோனே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  633

நியமம்பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்

கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு

முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்

தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 634

ஆதனம்வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்

திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்

தருந்தண் முழவங் குழலும் இயம்ப

இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே    

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

635

பிராணாயாமம்செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்

கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள

எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல

இன்பக் கலவி இருக்கலு மாமே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

636

  பிரத்தியாகாரம்சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்

ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன

ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்

காருறு கண்டனை மெய்கண்ட வாறே 


     SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

637

தாரணைநல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்

சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை

இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்

பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே   

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

638

 தியானம்தூங்க 1வல் லார்க்கும் துணையேழ் புவனமும்

வாங்கவல் லார்க்கும் வலிசெய்து  நின்றிடுந்

தேங்க  வல் லார்க்கும் திளைக்கும் அமுதமுந்

தாங்கவல் லார்க்குந் தன்தன்னிட மாமே


    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

639

 சமாதிகாரிய மான உபாதியைத் தாங்கடந்

தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற

ஆரிய காரண மாய தவத்திடைத்

தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே  

Comments