திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 845 to 850 thirumoolar thirumandhiram shiva vishnu tv மூன்றாம் தந்திரம் 20. அமுரி தாரணை

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -  845 to 850

  thirumoolar thirumandhiram

   shiva vishnu tv

 மூன்றாம் தந்திரம்

 20. அமுரி தாரணை 

845

உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்

கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்

உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்

நடலைப் படாதுயிர் நாடலு மாமே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

846

  தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்

ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை

வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்

களிதருங் காயங் கனகம தாமே 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

847

   நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்

மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்

தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்

மாறும் இதற்கு மறுமயி ராமே  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

848

  கரையரு கேநின்ற கானல் உவரி

வரைவரை என்பர் மதியிலா மாந்தர்

நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு

நரைதிரை மாறு நமனுமங் கில்லையே

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  849

  அளக நன்னுத லாயோ ரதிசயங்

களவு காயங் கலந்தஇந் நீரிலே

மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்

இளகும் மேனி இருளுங் கபாலமே

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

850

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்

நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்

ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்

சோதி மருந்திது சொல்லவொண் ணாதே  

Comments