திருமூலர் திருமந்திரம் ஓர் அறிமுகம்

திருமூலர் அருளிய திருமந்திரம் ஓர் 
அறிமுகம்

திருமந்திரம் திருமூலரால் தமிழுக்கு அளிக்கப்பட்ட யோக நூலாகும்.

 வடமொழியில் இருக்கும் பதஞ்சலியோக சூத்திரத்திற்கு நிகராகத் தமிழில் அமைந்த யோகநூல் என்று கூறப்படுகின்றது. திருமந்திரம் தோத்திர முறையில் சாத்திரங்கள் கூறும் நூலாகும்.

12-ஆம் திருமுறையில் திருமூலதேவ நாயனார் புராணத்தில் சேக்கிழாரால்

தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை

மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்ப (12-ஆம் திருமுறை - 23) என்று கூறப்படுவதால் திருமந்திரம், தமிழ் ஆகமம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

கலிவிருத்தம்

கலிவிருத்தம் என்னும் யாப்பு இலக்கணத்தால் ஆன நூல் திருமந்திரம் ஆகும். கலிவிருத்தம் கலிப்பாவினங்களில் ஒன்றாகும். கலிப்பா தமிழ்ப் பாவினங்களில் ஒன்றான விருத்தத்தின் வகைகளுள் ஒன்று. இது கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது.

கலித்தாழிசை

இரண்டு அடிகளோ, இரண்டிற்கு மேற்பட்ட பல அடிகளோ வரும். ஈற்றடி மிகுந்து, ஏனைய அடிகள் தம்முள் அளவொத்து வரும். ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வரும். தனியே வருவதும் உண்டு.

கலித்துறை

இது நான்கடிகளாய், ஒவ்வோர் அடியும் 5 சீர்களைப் பெற்று அமைந்திருக்கும்.

 கலிவிருத்தம்

ஒவ்வோரடியும் நான்கடியும் நான்கு சீர் பெற்று ஒரே எதுகை அமைப்பைக் கொண்டிருக்கும். நான்கு அடிகளிலும் சில சந்த ஒழுங்கு இடம் பெற்றிருக்கும். கலிவிருத்தம் காப்பியங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் கலிவிருத்த யாப்பில் தோன்றிய நூல்கள் பலவற்றிற்குத் திருமூலர் பெயரைச் சேர்த்துவிட்டனர். சைவ ஆகமங்களின் சாரமாகத் திகழும் இந்நூலை, தமிழில் எழுந்த சைவசமயம் சார்ந்த ஒரு கலைக்களஞ்சியம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

திருமந்திரத்தின் முதல் தந்திரம் முதல் ஒன்பதாவது தந்திரம் வரையிலான ஒவ்வொரு தந்திரமும் ஒவ்வொரு சமய உண்மையை நுட்பமாக எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. முதலில் கூறப்பட்டுள்ள பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, வேத ஆகமங்களின் சிறப்பு, திருமூலர் வரலாறு முதலியவை எடுத்துக் கூறப்பட்டுள்ளன. திருமந்திரம் எளிமையாகவும் மறைபொருளாகவும் எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ளது. ஆசையே துன்பத்திற்கு அடிப்படை என்று கூறுவதுடன், சிவஞானத்தைப் பெற விரும்புவோர் அதற்குத் தம்மைத் தகுதியாளராக்கிக்கொள்ளுதற்குத் திருமந்திரம் உரிய வழிகளை விளக்குகின்றது. சைவ சித்தாந்த உண்மைகளை விவரிக்கின்றது. ஞானம் பெறும் நிலையில் உணர்ந்து பெறத்தக்கனவாக உள்ள நல்ல பயன்கள் பற்றி உணர்த்துகின்றது.

ஆசனம், பிராணாயாமம், தியானம், சமாதி முதலியன பற்றியும், சித்திகள் பற்றியும், உடம்பைப் பேணிக் காக்கும் வழி பற்றியும் இந்நூல் விளக்கியுள்ளது. சைவ சமயத்தின் நான்கு பிரிவுகள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகள், அந்த நெறிகளில் நிற்பார் அடையும் நான்கு நிலைகளை விவரிக்கின்றது

இறைவன் இயல்பு, உயிர்களின் இயல்பு, பாசத்தின் பண்பு, குருவின் இன்றியமையாமை, நல்வினை தீவினைகள், தீவினை நீக்கம், ஞானம் கைவரப்பெற்ற சிவயோகிகளின் பெருமை, தன்மைகள் விரிவாக விளக்கியுள்ளது.

இறைவனைச் சென்று அடைதற்கு உரிய எளிய வழி குருவை வழிபடுதலால் கிடைக்கும் என்றும், பிறன் மனை நோக்காத பேராண்மையை ஆடவர் பெற வேண்டும் என்றும், காக்கை தன் இனத்தைக் கூவி அழைத்துக் கலந்து உண்பது போல், சக மனிதர்களோடு கலந்து உண்ணல் வேண்டும் என்றும், கற்றவர்களுக்கு மட்டுமே பேரின்பம் வாய்க்கும் என்றும், கேள்விச் செல்வமே மனிதர்களுக்கு உற்ற துணை என்றும், மிகுந்த காமமும் கள்ளுண்ணலும் கீழோர் செயல் என்றும், இந்நூல் அடையாளம் காட்டுகிறது.

விரும்பியவாறு ஆண் அல்லது பெண் குழந்தை பெற்றுக் கொள்வதற்குரிய மூச்சுப்பயிற்சி முறை, குழந்தைகள் குருடாய், ஊமையாய், முடமாய்ப் பிறப்பதற்குரிய காரண விளக்கம், திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமையாமை, இக்கால மருத்துவ இயல் கூறும் கருவியல் (embryology) பற்றியும், யோக சாத்திரங்கள், சைவ சித்தாந்தத் தத்துவங்கள், அறிவியல் கருத்துகள் எனப் பலவும் இதில் பரந்து விரிந்து கிடக்கின்றன. பல அரிய செய்திகளை வழங்கும் களஞ்சியமாகத் திருமந்திரம் அமைந்துள்ளது. 

இனி திருமந்திரம் பாடல்களை வரிசையாக பார்க்கலாம் 🙏

                 திருச்சிற்றம்பலம் 🙏

                 விநாயகர் காப்பு 🙏

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின்  இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை  ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

யாம் தொடங்கியிருக்கும் இந்த திருமூலரின் திருமந்திரம் பாடல்கள் மற்றும் விளக்கங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் வெற்றி பெற ஆசிர்வதித்து அருள் புரியுங்கள் விநாயக பெருமானே 🙏

இனி வரும் பதிவுகளில் கீழ்க்கண்ட பொருளடக்கத்தில் உள்ள பாடல்களை ஒவ்வொரு பதிவிலும் பார்க்கலாம் 🙏

ஓம் நமசிவாய வாழ்க 🙏


பொருளடக்கம்

 1. கடவுள் வாழ்த்து 
2. வேதச் சிறப்பு 
 3.ஆகமச்சிறப்பு
 4. குரு பாரம்பரியம்
 5. திருமூலர் வரலாறு
 6. அவையடக்கம்
 7. திருமந்திரத் தொகைச் சிறப்பு
 8. குருமட வரலாறு
 9. திருமூர்த்திகளின் சேட்ட, கனிட்ட முறை

 முதல் தந்திரம்

 1. உபதேசம்
 2. யாக்கை நிலையாமை
 3. செல்வம் நிலையாமை
 4. இளமை நிலையாமை
 5. உயிர் நிலையாமை
 6. கொல்லாமை
 7. புலால் மறுத்தல்
 8. பிறர் மனை நயவாமை
 9. மகளிர் இழிவு
 10. நல்குரவு
 11. அக்கினி காரியம்
 12. அந்தணர் ஒழுக்கம்
 13. இராச தோடம்
 14.வானச் சிறப்பு
 15. தானச்சிறப்பு
 16. அறம் செய்வான் திறம்
 17. அறம் செய்யான் திறம்
 18. அன்புடைமை
19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
20. கல்வி
21. கேள்வி கேட்டமைதல்
22. கல்லாமை
23. நடுவுநிலைமை
24.கள்ளுண்ணாமை

இரண்டாம் தந்திரம்

 1. அகத்தியம்
2. பதிவலியில் வீரட்டம் எட்டு
 3.இலிங்க புராணம்
4. தக்கன் வேள்வி
5.பிரளயம்
6. சக்கரப்பேறு
7.எலும்பும் கபாலமும்
8.அடி முடி தேடல்
9.சர்வ சிருஷ்டி 
10. திதி
11.சங்காரம்
12. திரோபவம்
13. அருளல் (அநுக்கிரகம்)
14. கர்ப்பக் கிரியை
15. மூவகைச் சீவ வர்க்கம்
16. பாத்திரம்
17. அபாத்திரம்
18. தீர்த்தம்
19. திருக்கோயிலிழிவு
20. அதோ முக தரிசனம்
 21. சிவ நிந்தை

22. குருநிந்தை
 23. மயேசுர நிந்தை
 24. பொறையுடைமை
 25. பெரியாரைத்
துணைக் கோடல்

மூன்றாம் தந்திரம்


1. அட்டாங்க யோகம்

2. இயமம்

3. நியமம் 
4. ஆதனம் 
5. பிராணாயாமம்
 6. பிரத்தியாகாரம்
 7. தாரணை
8. தியானம்
9. சமாதி
10. அட்டாங்க யோகப் பேறு
11. அட்டமாசித்தி
12. கலை நிலை
13. சரீர சித்தி உபாயம்
 14. கால சக்கரம்
 15. ஆயுள் பரீட்சை
 16. வார சரம் 
17. வார சூலம் 
18. கேசரி யோகம்  
19. பரியங்க யோகம்
 20. அமுரி தாரணை
 21.சந்திர யோக

 

நான்காம் தந்திரம் 

1. அசபை 
2. திரு அம்பல சக்கரம் 
3.அருச்சனை 
4.நவகுண்டம் 
5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்
6. வயிரவி மந்திரம்
7.பூரண சக்தி
8.ஆதாரவாதேயம்
9.ஏரொளிச்சக்கரம்
10.வயிரவச் சக்கரம்
11.சாம்பவி மண்டலச் சக்கரம்
12.புவனாபதி சக்கரம்
13.நவாக்கரி சக்கரம்



ஐந்தாம் தந்திரம் 


1.சுத்த சைவம்
2.அசுத்த சைவம்
3.மார்க்க சைவம்
4.கடுஞ் சுத்த சைவம்
5.சரியை
6.கிரியை
7.யோகம்
8.ஞானம்
9.சன்மார்க்கம்
10.சகமார்க்கம்
11.சற்புத்திர மார்க்கம்
12.தாச மார்க்கம்
13.சாலோகம் 
14.சாமீபம்
15.சாரூபம்
16.சாயுச்சியம்
17.சத்திநிபாதம்
18. புறச் சமய தூடணம்
19.நிராசாரம்
20.உட்சமயம்


ஆறாம் தந்திரம் 


1.சிவகுரு தரிசினம்
2.திருவடிப் பேறு
3.ஞாதுரு ஞான ஞேயம்
4.துறவு
5.தவம்
6. தவ நிந்தை
7.அருளுடைமையின் ஞானம் வருதல்
8.அவ வேடம்
9.தவவேடம்
10.திருநீறு
11.ஞான வேடம்
12.சிவ வேடம்
13.அபக்குவன்
14.பக்குவன்



ஏழாம் தந்திரம் 


1.ஆறு ஆதாரம்
2.அண்டலிங்கம் (உலக சிவம்)
3.பிண்டலிங்கம்
4.சதாசிவ லிங்கம்
5.ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம்)
6.ஞான லிங்கம்(உணர்வுச் சிவம்)
7.சிவலிங்கம் ( சிவகுரு )
8.சம்பிரதாயம்( பண்டை முறை )
9.திருவருள் வைப்பு
10.அருள் ஒளி
11.சிவபூசை
12.குருபூசை
13.மகேசுவர பூசை
14.அடியார் பெருமை
15.போசன விதி
16.பிட்சா விதி
17.முத்திரை பேதம்
18.பூரணக் குகை நெறிச் சமாதி
19.சமாதிக் கிரியை
20.விந்துற்பனம்
21.விந்து ஜயம் - போக சரவோட்டம்
22.ஆதித்த நிலை
23.பிண்டாதித்தன்
24.மன ஆதித்தன்
25. ஞானாதித்தன்
26.சிவாதித்தன்
27.பசு இலக்கணம்
28.புருடன்
29.சீவன்
30.பசு
31.போதன்
32.ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை
33.ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை
34.அசற்குரு நெறி
35.சற்குரு நெறி
36.கூடா ஒழுக்கம்
37.கேடு கண்டு இரங்கல்
38.இதோபதேசம்












Comments