திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2856 to 2863 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 15. சிவ சொரூப தரிசனம்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2856  to 2863

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  ஒன்பதாம் தந்திரம்

 15. சிவ சொரூப தரிசனம் 




2856

ஓதும் மயிர்க்கால் தோறும் அமு தூறிய

பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்

ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை

வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2857

    உணர்வும் அவனே உயிரும் அவனே

புணரும் அவனே புலவி அவனே

இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்

துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2858

 துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு

முன்னி அவர்தம் குறையை முடித்திடும்

மன்னிய கேள்வி மறையவன் மாதவன்

சென்னியுள் நின்றதோர் தேற்றத்தன் ஆமே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2859

   மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்

தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி

பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்

என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2860

   சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்

சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி

சுத்தப் பிரம துரியம் துரியத்துள்

உய்த்த துரியத்து உறுபே ரொளியே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2861

  பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல

உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல

தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்

அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2862

  முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்

பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா

சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால்

சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே.  

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


2863

 துரிய அதீதம் சொல்லறும் பாழாம்

அரிய துரியம் அதீதம் புரியில்

விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்

உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே.  


 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV

Comments