சிவன் பிரம்மா விஷ்ணு இவர்களின் கலவையான தத்தாத்ரேயர் வணங்கிய சிவலிங்கம்

 ஒருமுறை யார் பத்தினி என்ற விவாதத்தின் போது பார்வதி, லட்சுமி, சரஸ்வதி இவர்களைவிட பூலோகத்தில் வாழும் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசியா தேவி தான் சிறந்த பத்தினி என்ற ஒரு விவாதம் ஏற்படுகிறது..


இதனால் கோபமுற்ற முப்பெரும் தேவிகள் தங்களின் கணவன்மார்களான சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரிடமும் அவளின் அதாவது அனுசியா தேவியின் பத்தினி தர்மத்தை சோதித்து இந்த உலகத்துக்கு யார் சிறந்த பத்தினி என்று காட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.


பார்வதி தேவி, லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவியின் கோரிக்கையை ஏற்ற மும்மூர்த்திகளும் பூலோகத்தில் அத்திரி மகரிஷியின் ஆசிரமத்திற்கு மாறுவேடத்தில் செல்கின்றனர். 


இம்மூவரையும் கண்ட அனுசுயாதேவி இன்முகத்துடன் வரவேற்று "ஐயா வந்து அமருங்கள் உங்களுக்கு என்ன தேவை என்று சொல்லுங்கள்" என்று கேட்க... மூவரும் ஒன்றாக சேர்ந்து "எங்கள் மூவருக்கும் நீங்கள் உணவு கொடுக்க வேண்டும்" என்று கேட்கின்றனர்.


அடியார்கள் தம்மிடத்தில் உதவி கேட்டதை நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைந்த அனுசியா தேவி அவர்கள் "ஐயா சற்று பொறுங்கள் சிறிது நேரத்திலே உங்களுக்கு தேவையான உணவை தயார் செய்து கொடுக்கிறேன்" என்று இன் முகத்துடனும் பயபக்தியுடன் பதில் சொல்ல... 


அதற்கு மூவரும் அதாவது மும்மூர்த்திகளும் சேர்ந்து ஒரே ஒரு நிபந்தனை "நீங்கள் பிறந்த மேனியாக அதாவது நிர்வாணமாக அல்லது நிர்மூலமாக வந்து எங்களுக்கு உணவு பரிமாற வேண்டும் அப்பொழுதுதான் நாங்கள் உணவை உட்கொள்வோம்" என்று கூற உடனடியாக இது என்னடா வம்பா போச்சு!  என்று நினைத்த அனுசுயாதேவி அவர்கள் தமது ஞான திருஷ்டியில் வந்திருப்பவர்கள் யார் என்று அத்திரி மகரிஷிடம் கேட்க... அவர் வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்று ஞானதிஷ்டிலேயே பதில் கூறுகிறார்.


 உடனடியாக அனுசுயாதேவி அவர்கள்... "அதனால் என்ன சுவாமி நீங்கள் மூவரும் இங்கே இருங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு கமெண்டலத்தில் தண்ணீரை மூன்று பேர் மீதும் தெளித்து "குழந்தையாக மாறுங்கள்" என்று சொன்னவுடன் கை குழந்தையாக மாறிவிடுகிறார்கள்.


மேல் உலகத்தில் உள்ள முப்பெருந்தேவிகளும் ...என்னடா இது சென்ற  கணவன்மார்களை வெகு நேரம் ஆகியும் காணவில்லையே...? என்று கீழ்நோக்கி அத்திரி மகரிஷியின் வனத்துக்கு வருகிறார்கள்.


 அங்கே வந்து பார்த்தால் அவர்களின் கணவன்மார்கள் மூவருமே இல்லை! அப்பொழுது அனுசுயா தேவியிடம் "எங்கே? எங்களது கணவர்கள் எங்கே? வைத்திருக்கிறாய்" என்று கேட்டவுடன்..

 "இதோ படுத்து பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்" என்று காண்பிக்க மூவரும் மூன்று தொட்டில்களில் படுத்துக் கொண்டு குழந்தை வடிவத்திலே பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்..


இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முப்பெரும் தேவிகளும் தங்கள் கணவன்மார்களை மீண்டும் பழைய மாதிரி ஆக்கி விடுங்கள் என்று கெஞ்சும் தோனியில் சொல்ல அந்தக் கணமே அனுசியா தேவி மூவரையும் மீண்டும் சிவன், பிரம்மா, விஷ்ணு வடிவங்களில் வரச் செய்கிறார் தமது கற்ப்பு தன்மையால்.


முப்பெரும் தேவிகளுக்கும் அனுசியா தேவியின் பதிவிறதை அதாவது கற்பில் சிறந்தவள் என்பதை நிரூபிப்பதற்காக இறைவன் நடத்திய இந்த திருவிளையாடல் மிகவும் அற்புதமான ஒன்று அதேசமயம் பார்வதி தேவி, லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி மூவரும் அனுசுயா தேவியை கற்புக்கரசி பதிவிறதை என்று ஏற்றுக்கொண்டு வாழ்த்தினர்..


இந்த மூவரும் ஒருசேர காட்சியளித்தார்கள் அதாவது பிரம்மா விஷ்ணு சிவன் மூவரும் ஒருசேர ஒன்றாகி காட்சியளித்தது தான் தத்தாத்ரேயர் ஆவார். தத்தாத்ரேயர்  என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக பார்க்கப்படுகிறார்.


இவ்வளவு சக்தி வாய்ந்த தத்தாத்ரேயர் அவர்கள் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அந்த லிங்கத்தை வணங்கினால் அந்த லிங்கத்திற்கு எவ்வளவு சக்திகள் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்படி ஒரு லிங்கம் தான் நமது திருவதிகை விரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் வைத்து வணங்கப்படுகிறது அதாவது தத்தாத்ரேயர் சுவாமி வணங்கிய சிவலிங்கம் இக்கோவிலில் உள்ளது. அன்பர்கள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு சென்று அந்த லிங்கத்தை மனதார வணங்கினால் உங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அது சரி செய்யப்படும் என்று அடியார்களால் நம்பப்படுகிறது...


கீழே உள்ள லிங்கில் தத்தாத்ரேயர் வணங்கிய சிவலிங்கம் வீடியோ வடிவில் கொடுத்துள்ளோம் ஆர்வம் உள்ள நண்பர்கள் பார்த்து சிவனின் அருளை பெறுங்கள்🙏🙏🙏










Comments