3000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில்


கடந்த 1994 ம் வருடம் திருவதிகை
 வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் உள் வலாகத்தில் கோவில் திருப்பணி காரணமாக பள்ளம் தோண்டும்போது அதாவது சரியாக சொல்ல வேண்டும் என்றால் திருக்கோவிலில்  சரக்கொன்றை மரம் உள்ளது அந்த மரத்தின் அருகே குழி தோண்டும் போது இந்த அற்புதமான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

விளம்பரம் -


இந்த சிவலிங்கத்தை நேரில் பார்க்கும்போது மிகவும் பிரமாண்டமாக இருக்கும் தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த சிவலிங்கத்தை ஆய்வு செய்து கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சிவலிங்கமாக இருக்கலாம் என்று சான்று கொடுத்துள்ளதாக தகவல் கூறுகின்றனர் கோவிலில் உள்ளவர்கள். 

இந்த சிவலிங்கத்திற்கு சரக்கொன்றைநாதர் என்று பெயர் வைத்து கோவில் நிர்வாகம் வழிபட்டு வருகிறது. 

இத்திருக்கோவிலில் தல விருச்சமாக சரக்கொன்றை மரம் விளங்குவதாலும் சரக்கொன்றை மரத்தின் அருகே இந்த சிவலிங்கம் கிடைத்ததாலும் இந்த சிவலிங்கத்திற்கு சரக்கொன்றைநாதர் என்ற பெயரை வைத்து அற்புதமான முறையில் வழிபட்டு வருகின்றனர். 

மேலும் இக்கோவிலின் சுற்றுப்புறங்களில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னும் பல நூறு வருடங்களுக்கு முன்பும் சரக்கொன்றை மரங்களும், வில்வம் மரங்களும் சூழ்ந்த காடாக இருந்ததாலும் இப்பெயர் வருவதற்கு காரணமாக கூறுகின்றனர் கோவிலில் இருப்பவர்கள்.

விளம்பரம் -

இந்த சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் பிரதோஷம் என்றும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மேலும் இந்த சரக்கொன்றைநாதற்கு சிவராத்திரி முடிந்த மறுநாள் பொதுமக்கள் தங்கள் கைகளால்  அபிஷேகங்கள் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது ஆகவே இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த சிவலிங்கத்திற்கு தாராளமாக அபிஷேகம் செய்யலாம்.

திருவதிகை விரட்டானேஸ்வரர் திருக்கோவில் செல்லும் பெரும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் இந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்து சரக்கொன்றைநாதரின் அருள் பெறுமாறு சிவா விஷ்ணு டிவி சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க... 

மேலே குறிப்பிட்ட சரக்கொன்றை நாதரின் வீடியோ தரிசனம் வேண்டுமென்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..
 சரக்கொன்றை நாதரின் வீடியோ தொகுப்பு கீழே உள்ள லிங்கில் உள்ளது. 











Comments