ஒரே இடத்தில் நின்று 4 கோபுரங்களையும் தரிசனம் செய்யும் அற்புதமான இடம் சிதம்பரம் நடராஜர் கோவிலில்..


சிதம்பரம் நடராஜர் கோவில் என்று சொன்னாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருபவர் தாண்டவம் ஆடும் நடராஜன் சிலை தான் .

விளம்பரம் -


நடராஜர் சன்னதி உள்ளே செல்லும் பொழுது நாம் முழுதாக சுற்றிவர வேண்டும் என்றால் குறைந்தது ஒரு மணி நேரமாவது நமக்கு தேவைப்படும். இன்னும் நிதானமாக ஒவ்வொரு இடத்திலும் அமர்ந்து இறைவனை வழிபட்டு அந்த புனிதங்களை தெரிந்து கொண்டு நாம் கோவிலை விட்டு வெளியே வரவேண்டும் என்று நினைத்தால் குறைந்தது அரை நாள் போதாது.

அப்படி நாம் நடராஜர் கோவில் உள்ளே போகும்பொழுது அனைத்து கோபுரங்களையும் ஒரே இடத்தில் இருந்து தரிசிக்க ஒரே ஒரு இடம் தான் உள்ளது . அம்பாள் சன்னதி அருகில் அந்த இடம் இருக்கிறது அந்த இடத்தில் நின்று பார்த்தால் தான் நான்கு பக்கமும் உள்ள நான்கு கோபுரங்களும் நமக்கு ஒரே நேரத்தில் தெரியும். 

வேறு எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் இந்த அரிய காட்சியை நம்மால் காண இயலாது. 

விளம்பரம் -

நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றால் யாம் குறிப்பிட்ட இந்த இடத்தில் நின்று நான்கு கோபுரங்களையும் தரிசனம் செய்துவிட்டு இறைவனின் அருளை பெற்று வருமாறு அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.. 

வீடியோ வடிவில் அந்த இடத்தை நீங்கள் காண்பதற்கு... கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் ஒரே இடத்தில் நின்று நான்கு கோபுரங்களையும்  தரிசனம் செய்யும் அற்புதமான காட்சியை வீடியோ தொகுப்பாக கொடுத்து உள்ளோம்.





Comments